நாவலடி விபத்தில் ஒருவர் பலி - சாரதி கைது ! - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 9 October 2025

நாவலடி விபத்தில் ஒருவர் பலி - சாரதி கைது !

மட்டக்களப்பு-கொழும்பு பிரதான வீதியில் வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவலடி பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.


நேற்று  (08/10/2025) புதன்கிழமை காலை கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி வந்த கார் தூக்கம் காரணமாக வீதியை விட்டு விலகி வீதியோரமாக பயணித்தவர் மீது மோதியே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரிய வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இவ்விபத்தில் ஓட்டமாவடி-01, பதியுதீன் மஹ்மூத் வீதியைச்சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான சீனி முகம்மது முகம்மது இப்றாஹீம் (வயது - 63) என்பவர் மரணமடைந்துள்ளார்.


வாகனச்சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad