மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேசசபை திருப்பழுகாமம் பொது நூலகத்தில் சிறுவர் தின நிகழ்வு! - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 1 October 2025

மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேசசபை திருப்பழுகாமம் பொது நூலகத்தில் சிறுவர் தின நிகழ்வு!

உலகளாவிய ரீதியில் சிறுவர்களை மகிழ்விக்கும் நோக்கிலும் அவர்களின் உரிமைகளை உறுதிப்படுத்தும் நோக்குடனும் அவர்களுக்கென்று ஒரு தினமும் வகுக்கப்பட்டு கொண்டாடப்படுகின்றது. அதுதான் சர்வதேச சிறுவர் தினமாகிய அக்டோபர் 1 ம் திகதியாகும்.


உலக சிறுவர் தினத்தினை முன்னிட்டு  பாலர்பாடசாலை மாணவர்களை கௌரவிக்கும் முகமாக போரதீவுப்பற்று பிரதேசசபை திருப்பழுகாமம் பொதுநூலகத்தில் இன்று (01-10-2025) ஆம் திகதி இடம் பெற்றது.

இன் நிகழ்வில் பிரதம அதிதிகளாக  போரதீவுப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் வி.மதிமேனன், பிரதேசசபையின் பழுகாம வட்டார  உறுப்பினர்.சு.விக்கினேஸ்வரன், க.மிருத்தனன் இலங்கைக்கான அகிலன் பவுன்டேசன் இணைப்பாளரும் திடீர் மரண விசாரணை அதிகாரியும் ஆகிய  வி.ஆர்.மகேந்திரன் JP.MAF,  ஓய்வு பெற்ற பாடசாலை அதிபர்  சு.உதயகுமார், பழுகாமம்வாசகவட்ட நிருவாகத்தினர் ஆகியோர் கலந்நது கொண்டதுடன் பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள் நூலக சேவகர்கள் , பொது அமைப்புக்கள் கலந்து கொன்டனர்.

இன்றைய சிறுவர் தின நிகழ்வுக்கு  பரிசுப் பொருட்கள்,சிற்றுண்டிகள்வழங்கிய அனுசரணையாளர்கள்  வாசகர் வட்ட பொருளாளர் செ. பேரின்பம், பிரதேசசபை உறுப்பினர் சு. விக்கினேஸ்வரன் ஆவர். 







                                                               (ரஞ்சன்)

No comments:

Post a Comment

Post Top Ad