உளவளத்துணை வாரத்தினை முன்னிட்டு நேற்று (15) மண்முனை தென்எருவில் பற்றும் (களுவாஞ்சிக்குடி) பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில், களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற சமுதாய சீர்திருத்த காரியாலயம் மற்றும் சமுர்த்தி திணைக்களம் இணைந்து நடாத்திய போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான வீதி நாடகம் களுவாஞ்சிக்குடி பொதுசந்தைக்கு முன்பாக இடம்பெற்றது.
இவ்நிகழ்வில் களுவாஞ்சிக்குடி உதவி பிரதேச செயலாளர், சமுதாய சீர்திருத்த காரியாலய உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், உளவளத்துணை உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
வீதி நாடகத்தில் பங்கு பற்றிய பாடசாலை மாணவர்களை கௌரவிக்கும் விதமாக சான்றிதழ்களும், நினைவுச்சின்னமும் வழங்கி வைக்கப்பட்டது.
(ரஞ்சன்)









No comments:
Post a Comment