தேசிய ஆவணவாக்கல் சபையினால் கடந்த 2004ஆம் ஆண்டு தொடக்கம் ஒக்டோபர் மாதம் தேசிய வாசிப்பு மாதமாக அரசால் தேசிய வாசிப்பு மாதமாகப் பிரகடனப்படுத்தப்பட்டு பொது நூலகங்கள் மற்றும் பாடசாலைகளிலுள்ள நூலகங்களிலும் வாசிப்பு தொடர்பான விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில் இம் மாதம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சித் திட்டங்கள் போரதீவுப்பற்று பிரதேசசபையினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
இதனை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேசசபையின் வெல்லாவெளி கலாசார மண்டபத்தில் பிரதேசசபையின் தவிசாளர் வி.மதிமேனன் தலைமையில் பல நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.
அந்த வகையில் நேற்று (15) போரதீவுப்பற்று பிரதேசத்திற்குட்பட்ட 33பாடசாலையின் மாணவர்களின் பங்குபற்றலுடன் ஆரம்பமானது.
வருடாவருடம் போரதீவுப்பற்று பிரதேசசபையினால் நடைமுறைப்படுத்தப்படும் தேசிய வாசிப்பு மாதம் ஒக்டோபர் முன்னிட்டு (தொனிப் பொருள். மறுமலர்ச்சிக்காக வாசிப்போம்) இவ் வருடமும் போரதீவுப்பற்று பிரதேசசபையுடன் 12 பொது நூலகங்களும் இணைந்து பிரதேசசபைக்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளையும் ஒன்றிணைத்து மாணவர்களுக்கான போட்டி நிகழ்வுகளை நடாத்தப்படுகின்றன.
பாடசாலைகளின் இடை நிலைப் பிரிவு மற்றும் உயர் நிலைப் பிரிவு மாணவர்களுக்கான பேச்சு, கட்டுரை, கவிதை, வினாவிடை போட்டி, என்பனவும் இடம் பெற்றது.
போரதீவுப்பற்று பிரதேசசபையின் தவிசாளர் வி.மதிமேனன் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் பிரதேசசபையின் செயலாளர் எஸ்.பகீரதன், உள்ளூராட்சி உதவியாளர், அபிவிருத்தி சனசமுக உத்தியோஸ்தர், பிரதேசசபையின் உத்தியோகஸ்தர்கள், ஆசிரியர்கள், நூலக சேவகர்கள், மாணவர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
( ரஞ்சன் )









No comments:
Post a Comment