பழுகாமம் வெள்ளிமலை கலாசார மண்டபத்தில் உயர்தர மாணவர்களுக்கு பரீட்சைக்கான இலவச கல்வி கருத்தரங்கு.! - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 28 September 2025

பழுகாமம் வெள்ளிமலை கலாசார மண்டபத்தில் உயர்தர மாணவர்களுக்கு பரீட்சைக்கான இலவச கல்வி கருத்தரங்கு.!

மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு கல்வி வலயத்தில் உள்ள மட்/பட்/பழுகாமம் கண்டுமணி ம.வித்தியாலய  பாடசாலையின் நேற்று (27)  78 ஆவது ஆண்டு நிறைவு விழாவாகும்.

இன்றைய நன்னாளில் பாடசாலையின் 78ஆவது நிறைவு விழாவினை சிறப்பிக்கும்  முகமாக கேக் வெட்டி கொண்டாட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

இன்றைய நன்னாளில் இப் பாடசாலையில் 2004 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரம் கல்வி கற்ற பழைய மாணவர்களால் 2025 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தர பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு பொது அறிவு பரீட்சைக்கான இலவச கல்வி கருத்தரங்கானது பழுகாமம் வெள்ளிமலை கலாசார மண்டபத்தில் இடம் பெற்றன.

இன்றைய கருத்தரங்கு நிகழ்வில் பிரதம அதிதியாக பட்டிருப்பு வலய கல்வி பணிப்பாளர்  சி.ஶ்ரீதரன்  அவர்களின் பங்கேற்புடனும் வளவாளராக தெஹியத்தகண்டி பிரதேச செயலாளர்  செ.பார்த்தீபன் அவர்களின் பங்கேற்புடனும்,ஓய்வு நிலை ஆசிரியர் ஆலோசகர் திருமதி ரஞ்சினிதேவி நவரெத்தினராஜா, பாடசாலை அதிபர்,ஆசிரியர்கள்,மாணவர்கள் மற்றும் பழைய மாணவர்களின் பங்கேற்புடனும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.




                                                                   (ரஞ்சன்)

No comments:

Post a Comment

Post Top Ad