இலங்கையின் மதுரைமீனாட்சியம்மன் ஆலயம் என்ற பெருமையினைக்கொண்ட மட்டக்களப்பு பெரியபோரதீவு பத்திரகாளியம்மன் ஆலய உற்சவம் நேற்று (27) திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமானது.
சக்திபுகழ் ஓங்கும் திருநாடு பெரியபோரதீவில் விஸ்வகுலம் தழைத்தோங்க அருள்புரியும் அன்னை பத்திரகாளியம்மன் ஆலயத்தின் திருச்சடங்கு இன்று ஆரம்பமானது.
ஆலயத்தில் ( 05.10.2025 )ஆம் திகதி வீரகம்பம் வெட்டும் நிகழ்வும் மாலை வாழைக்காய் எழுந்தருளல் செய்யும் நிகழ்வும் நடைபெற்றதுடன், (07.10.2025 )ஆம் திகதி பகல் சக்தி மகாயாகமும் நோர்ப்பு கட்டுதல் நிகழ்வு நடைபெற்று மாலை கங்கை நீராடல் நிகழ்வு நடைபெறும்.
அன்னைக்கு விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்று அன்னை ஊர் காவல் பன்னும் நிகழ்வும் அதனைத் தொடர்ந்து தீமூட்டும் நிகழ்வு நடைபெறும்.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ (08.10.2025)ஆம் திகதி காலை 8.00மணிக்கு தீமிதிப்பு நிகழ்வு இடம்பெற்று நண்பகல் 12.00மணிக்கு வாழி பாடுதல் கொடியிறக்கம் என்பன நிகழ்வுகள் இடம்பெற்று இவ்வாண்டு சக்திப் பெரு விழா இனிதே நிறைவுபெறும்.
(ரஞ்சன்)




No comments:
Post a Comment