மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேசசபையின் உப தவிசாளரை கௌரவிக்கும் நிகழ்வு! - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 21 September 2025

மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேசசபையின் உப தவிசாளரை கௌரவிக்கும் நிகழ்வு!

மட்டக்களப்பு மாவட்டம் கூழாவடி நெல்லிக்காடு கிராம அபிவிருத்திச் சங்கத்தினால் போரதீவுப்பற்று பிரதேசசபையின் உப தவிசாளர் த.கயசீலன் அவர்களை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று முன்தினம் (19) இடம் பெற்றன.

இன்றைய கௌரவிக்கும் நிகழ்வின் போது போரதீவுப்பற்று பிரதேசசபையின் உப தவிசாளர் த.கயசீலன் அவர்களினால் பாலையடி வட்டாரத்தில் காட்டு யானையினால் பாதிக்கப்படும் இடங்களுக்கு தெருவிளக்குகளை போடுவதற்காக  அவருடை சொந்த நிதியில் இருந்து   மின்குமிழ்களை வழங்கி வைத்துள்ளனர்.



அதுமாத்திரம் மன்றி போரதீவுப்பற்று பிரதேசசபையின் பாலையடிவட்டை பொதுசந்தையில் 2008ஆம் ஆண்டு தொடக்கம்  ரானுவத்தினால் ஆக்கிரமைக்கப்பட்டு வரும் ரானுவ முகாமை அகற்ற கோரி கடந்த போரதீவுப்பாற்று பிரதேச சபை அமர்வின் போது தவிசாளரினால்  தீர்மானம் கொண்டுவரப்பட்டு அது ஏகமனதாக நிறைவேறியது.

தமிழரசிக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனிடம் ரானுவ முகாமை மிக விரைவில் அகற்றி மக்கள் பாவனைக்கு வழங்கும் படி கோரிஇருந்தேன் அது நாடாளுமன்றில் பேசி இருந்தனர். 


அது எமது மக்களின் கைகளுக்கு மிகவிரைவில் கிடைக்கும் என தெரிவித்தார்.


எமது போரதீவுப்பற்று பிரதேசசபையின்  தவிசாளரினால் பல அபிவிருத்தி வேலைகள்  பாலையடிவட்டாரத்திற்கு  ஒதுக்கப்பட்டு இடம்பெறுகின்றன.


மற்றும் படுவான்கரையின் போரதீவுப்பற்று பிரதேச முச்சக்கரவண்டிகள் சங்கத்திக்கும் எழுவான்கரை முச்சக்கரவண்டிகள் சங்கத்திற்குமான நீன்ட நாளாக இருந்து வந்த களுவாஞ்சிகுடியில் வாகன தரிப்பிடப்பிரச்சினையினை மன்முணை தென்எருவில் பற்று தவிசாளர் வினோராஜ் அவர்களுடன் கடந்தவாரம் பேசி இரு பகுதிகளிலும் உள்ள முச்சக்கரவண்டிகள் சங்க தலைவர்களுடன் சுகுகமான முறையில் இதற்கான தீர்வை போரதீவுப்பற்று பிரதேசசபையின் தவிசாளர் வி.மதிமேனன் அவர்களின் வேண்டுதலுக்கும் அமைவாக தீர்க்கப்பட்டன.


எமதுமக்களுக்கு படிப்படியாக அனைத்து விதமான வேலைகளும் போரதீவுப்பற்று பிரதேசசபையின் தவிசாளர் அவர்களி மேற்பார்வையோடு மக்களுக்கு செய்வேன் என போரதீவுப்பற்று பிரதேசசபையின் உப தவிசாளர் த.கயசீலன் நிகழ்வின் போது தெரிவித்தார்.

இன்றைய கௌரவிப்பு நிகழ்வின் போது கூழாவடி நெல்லிக்காடு கிராமதில் ஒரேஒரு  சமாதானநீதவானாக தெரிவாகி உள்ள புனர்வாள்வு பெற்ற  போராளி சி.கோபாலசிங்கம் அவர்களும் கௌரவிக்கப்பட்டன.


கிராமத்தில் கல்விகற்று சாதாரன தரம்,உயர்தரத்தில் சித்தி பெற்ற மாணவர்களும் கௌரவிக்கப்பட்டன.




இன்றைய நிகழ்வின் போது கிராம அபிவிருத்தி உத்தியோகஸ்தர்,சமூர்த்திஉத்தியோகஸ்தர்,ஆசிரியர்கள்,கிராமஅபிவிருத்திசங்கத்தினர்,ஆலய நிருவாகத்தினர்,பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.









No comments:

Post a Comment

Post Top Ad