மட்டக்களப்பு மாவட்டம் வாகரை, கருவப்பங்கேணி பகுதியில் குளத்திற்கு நீராடச்சென்ற மூன்று சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக வாகரை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் இன்று (06) மாலை இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.
உயிரிழந்த இரண்டு சிறுமிகளும் ஒரு சிறுவனும் என வாகரை பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த மூவரும் 11 வயதுடையவர்கள் எனவும் மூவரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் வாகரை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.
(ரஞ்சன்)
No comments:
Post a Comment