அல்- மீஸான் ஒருங்கிணைப்பில் 400க்கு மேல் மாணவர்கள் கலந்து கொண்ட தரம் ஐந்து இலவச கருத்தரங்கு ! - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 6 July 2025

அல்- மீஸான் ஒருங்கிணைப்பில் 400க்கு மேல் மாணவர்கள் கலந்து கொண்ட தரம் ஐந்து இலவச கருத்தரங்கு !

1000136947

அல்- மீஸான் பௌண்டஷன், ஸ்ரீலங்காவின் ஒருங்கிணைப்பில் ஜூனியர் தமிழனின் “கற்றலுக்கு கரம் கொடுப்போம்” திட்டத்தின் கீழ் கல்முனை கல்வி வலய 28 பாடசாலைகளிலிருந்து தெரிவு செய்யப்பட்ட தரம் ஐந்து மாணவர்கள் கலந்து கொண்ட புலமைப்பரிசில் இலவச கருத்தரங்கு கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி சேர் ராஸிக் பரீட் மண்டபத்தில் அல்- மீஸான் பௌண்டஷன், ஸ்ரீலங்காவின் தவிசாளர் நூருல் ஹுதா உமரின் நெறிப்படுத்தலில் சனிக்கிழமை நடைபெற்றது. 

1000136635

தெரிவு செய்யப்பட்ட தரம் ஐந்தில் கல்வி கற்கும் 410 மாணவர்கள் கலந்து கொண்ட இந்த முழுநாள் கருத்தரங்கை கல்முனை கல்வி வலய நிர்வாக பிரதி கல்வி பணிப்பாளர் எம்.எச்.எம். ஜாபீர் பிரதம அதிதியாக வும், கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி அதிபர் ஏ.பி.எப். நஸ்மியா சனூஸ் கௌரவ அதிதியாகவும், ஜூனியர் தமிழன் பத்திரிகை ஆசிரியர் வருணி ஐசக், சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம். அஸ்ரப் வித்தியாலய அதிபர் எம்.ஐ. சம்சுதீன் ஆகியோர் விசேட அதிதியாகவும் கலந்துகொண்டு தொடக்கி வைத்தனர். 

1000136625

தமிழ், முஸ்லிம், கிறிஸ்தவ பாடசாலைகளைச் சேர்ந்த 400 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்ட இந்த புலமைப்பரிசில் இலவச கருத்தரங்கின் வளவாளராக பது/ பசறை தமிழ் மகா வித்தியாலய ஆசிரியர் எம். சங்கரேஸ்வரன் கலந்து கொண்டதுடன் அல்- மீஸான் பௌண்டஷன் ஸ்ரீலங்காவின் பொருளாளர் எல்.எம். நிப்ராஸ் உட்பட  நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள், இளைஞர் பிரிவினர், தமிழன் ஆசிரிய பீடத்தினர், பிரதேச பாடசாலை ஆசிரியைகள் என பலரும் கலந்து கொண்டனர். மாணவர்களுக்கான காலை உணவின் அனுசரணையை ரிஸ்லி முஸ்தபா கல்வி மையம் சமுக சேவை அமைப்பு மற்றும் சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் அமீர் அப்னான் ஆகியோர் வழங்கியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


                   ( மாளிகைக்காடு செய்தியாளர்) 



No comments:

Post a Comment

Post Top Ad