தேசிய விருது விழாவில் கிழக்கு மாகாணத்தின் பெருமை: 𝐒𝐋𝐀𝐒𝐒𝐂𝐎𝐌 𝐈𝐍𝐆𝐄𝐍𝐔𝐈𝐓𝐘 𝟐𝟎𝟐𝟓 விருதைப் பெற்ற 𝐍𝐞𝐬𝐭 𝐈𝐧𝐭𝐞𝐫𝐧𝐚𝐭𝐢𝐨𝐧𝐚𝐥 (𝐏𝐯𝐭) 𝐋𝐭𝐝 ! - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 5 July 2025

தேசிய விருது விழாவில் கிழக்கு மாகாணத்தின் பெருமை: 𝐒𝐋𝐀𝐒𝐒𝐂𝐎𝐌 𝐈𝐍𝐆𝐄𝐍𝐔𝐈𝐓𝐘 𝟐𝟎𝟐𝟓 விருதைப் பெற்ற 𝐍𝐞𝐬𝐭 𝐈𝐧𝐭𝐞𝐫𝐧𝐚𝐭𝐢𝐨𝐧𝐚𝐥 (𝐏𝐯𝐭) 𝐋𝐭𝐝 !

508ff632-3cdc-466e-bcb3-43960d65c363

இலங்கை மென்பொருள் சேவை நிறுவனங்களுக்கான சங்கமான SLASSCOM ஏற்பாடு செய்த SLASSCOM Ingenuity Awards 2025 தேசிய விருது விழாவில், Nest International (Pvt) Ltd நிறுவனம் 𝐁𝐞𝐬𝐭 𝐒𝐭𝐚𝐫𝐭-𝐮𝐩  பிரிவில் முதலிடம் பிடித்து கிழக்கு மாகாணத்திற்கு பெருமை சேர்த்துள்ளது.


இந்த விழா 2025 ஜூலை 1ஆம் திகதி, கொழும்பு தாஜ் சமுத்திரா நட்சத்திர ஹோட்டலில் வெகு விமர்சையாக நடைபெற்றது. தொழில்நுட்பம், கல்வி, வர்த்தகம், வேலைவாய்ப்பு, மற்றும் புதுமை சார்ந்த கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் நோக்கில் ஆண்டு தோறும் நடத்தப்படும் இவ்விழா, நாடளாவிய ரீதியில் ஒரு தனித்துவமான நிகழ்வாக அமைந்தது.


Nest International Pvt Ltd நிறுவனத்தின் ஸ்தாபகரான பொறியியலாளர் 𝐍𝐚𝐬𝐚𝐫 𝐌𝐨𝐡𝐚𝐦𝐦𝐞𝐝 𝐒𝐚𝐟𝐧𝐚𝐬  மற்றும் நிர்வாக ஆலோசகரான NJ. Zeron Anas ஆகியோர் இந்த தேசிய விருதை, விழாவின் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா அவர்களிடம் இருந்து பெற்றுக் கொண்டனர்.


இந்த விருது வழங்கும் விழாவில், 1996 உலகக் கோப்பை வென்ற இலங்கை கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் அரவிந்த டி சில்வா, SLASSCOM நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் நிஷான் மெண்டிஸ், மற்றும் பல முன்னணி நிறுவனங்களின் நிர்வாகப் பிரதிநிதிகள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

53221797-b6eb-4459-a3da-779cc2382239

Nest International Pvt Ltd நிறுவனத்தின் தேசிய வெற்றிக்கு வழிவகுத்தது, 𝐍𝐞𝐬𝐭 𝟑𝟔𝟎 Services எனும் புதியதோர் தொழில்நுட்பத்தின் அறிமுகமாகும். இது, தொழில்நுட்ப சேவைகளின் புதிய பரிமாணங்களை நவீன கட்டுமானத் துறையில் ஏற்படுத்தியுள்ளது, மேலும் இதுநவீனத் திறனுடன் வடிவமைக்கப்பட்ட தீர்வாகும். நாட்டின் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த நிறுவனம் எனும் வகையில், இவ்விருதை வெல்வது கிழக்கு மாகாணத்துக்கு ஒரு பெரும் கௌரவமாகும்.


இந்த விழாவில், பல்கலைக்கழகங்கள், பாடசாலைகள், தனியார் மற்றும் பொது மென்பொருள் நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளிலுள்ள போட்டியாளர்கள் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.


SLASSCOM இன் மூலமாக, இளம் தொழில்முயற்சியாளர்கள் மற்றும் புதுமை யோசனையாளர்கள் நாடு முழுவதும் தொழில்துறையின் வளர்ச்சிக்காக பங்களிக்க வழிவகை செய்யப்படுகிறது.


Nest International Pvt Ltd நிறுவனத்தின் இந்த வெற்றி, இளம் நிறுவனங்களுக்கு ஊக்கமளிக்கும் முன்மாதிரியாகவும், கிழக்கு மாகாண இளைஞர்களுக்கான ஒரு பிரதான முன்னுதாரணமாகவும் அமைந்துள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad