கிழக்கிலங்கையில் பழமை வாய்ந்த ஆலயமான மட்டக்களப்பு கூழாவடி 37ஆம் கிராமம் அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய ஆனி உத்தர மகோற்சவப் பெருவிழாவின் தீர்த்த உற்சவம் இன்று (02-07-2025) ஆம் திகதி புதன்கிழமை இடம்பெற்றது.
இதன்போது வசந்த மண்டப மற்றும் மஞ்சள் பூசைகள் என்பன இடம்பெற்று தீர்த்தமாடுவதற்காக தும்பாலையில் உள்ள புனித கங்கையில் நூற்றுக்கணக்கில் பக்த அடியார்கள் கலந்து கொண்டதுடன் அங்கு அபிஷேக பூசைகள் இடம்பெற்று தீர்த்தோற்சவம் நடைபெற்றது.
கடந்த திங்கட்கிழமை (23-06-2025)ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான மகோற்சவம் ஞாயிற்றுக்கிழமை (29-06-2025) ஆம் திகதி மாம்பழத் திருவிழாவும், திங்கட்கிழமை (30-06-2025)ஆம் திகதி திரு வேட்டைத் திருவிழா பழனி முருகன் ஆலயத்தில் இடம் பெற்றன.
செவ்வாய்க்கிழமை (01-07-2025)ஆம் திகதி சப்பறத்திருவிழா இடம் பெற்றது.
இன்று(02-07-2025)ஆம் திகதி புதன்கிழமை காலை தும்பாலையில் உள்ள புனித கங்கையில் தீர்த்தோற்சவத்துடன் உற்சவம் நிறைவு பெற்றுள்ளது.
உற்சவ பூசைகள் யாவும் மகோற்சவ கால பிரதம குரு சிறப்பு சொற்பொழிவாளர் ஈசான சிவாச்சாரியார் சிவஸ்ரீ.சின்னையா கிருபாகர குருக்கள் தலைமையில் இடம்பெற்றது.
(ரஞ்சன்)
No comments:
Post a Comment