1983 கறுப்பு ஜூலை 42 வருட வலி சுமந்து ஈழத்தமிழர்களின் இன படுகொலை மறக்க முடியாத வடுவாகும் - நினைவு நிகழ்வில் காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர் எஸ்.பாஸ்கரன் ! - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 24 July 2025

1983 கறுப்பு ஜூலை 42 வருட வலி சுமந்து ஈழத்தமிழர்களின் இன படுகொலை மறக்க முடியாத வடுவாகும் - நினைவு நிகழ்வில் காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர் எஸ்.பாஸ்கரன் !





1983 கறுப்பு ஜூலை 42 வருட வலி சுமந்து ஈழத்தமிழர்களின் இன படுகொலை மறக்க முடியாத வடுவாகும் என்று காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர் எஸ். பாஸ்கரன் தெரிவித்தார்.


கறுப்பு ஜூலை கலவரத்தின் 42 வது வருடத்தை நினைவுகூரும் நினைவேந்தல் நிகழ்வு  நேற்று (23) புதன்கிழமை மாலை காரைதீவில் நடைபெற்றது.


1983 கறுப்பு ஜூலை 42வருட வலி சுமந்து ஈழத்தமிழர்களின் இன படுகொலைக்கு எதிராக காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர் சு.பாஸ்கரன் தலைமையில் இந்நிகழ்வு நடாத்தப்பட்டது.


இங்கு காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் உட்பட பிரதேச மக்கள் பலரும் கலந்து கொண்டனர்.


இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய தவிசாளர் பாஸ்கரன்,


காரைதீவு எல்லையில் கறுப்பு ஜூலை 1983 ஆம் ஆண்டு மறக்கவும் முடியாத, மன்னிக்கவும் முடியாத இந்த துயரான நாளானது இன்று 42 வருடங்களாக மறக்கவும் முடியாமல் காணப்படுகின்றது.


1983 ஜூலை 23 தொடக்கம் 30 காலப்பகுதியில்  இனப்படுகொலை அதாவது தமிழினத்தின் படுகொலை மிகவும் கொடூரமாக காணப்பட்டது, அதாவது பேரினவாத சக்திகளால் இந்த கொடூரமான நிகழ்வு எங்களது இனப்படுகொலை, குறைந்தது அந்த காலகட்டத்தில் மூவாயிரம் பேர், இந்த இனப்படுகொலை செய்யப்பட்டதாக அறிந்துள்ளோம். இந்தவகையில் இந்த  இனப்படுகொலைக்கு எதிராக நாங்கள் தொடர்ந்தும் அந்த நினைவேந்தலை செய்வோம் என்றும் கூறினார்.


இங்கு மேலும் உரையாற்றிய காரைதீவு பிரதேச சபையின் உறுப்பினர் கோபிகாந்த் தனதுரையில்,


இன்று காரைதீவு தமிழரசுக் கட்சியின் மூலமாக இந்தக் கறுப்பு ஜூலை 83 ஆம் ஆண்டு நிகழ்வானது எமது காரைதீவு  பிரதேச சபையின் தவிசாளரினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வானது நாங்கள் அறிய இந்த இலங்கைத் திருநாட்டிலே, எங்களது இந்து சமயம் நான்கு புறத்தே ஆண்ட, இந்த நாட்டிலே தமிழர்கள் பாரம்பரியம் உள்ள இந்த நாட்டிலே 83 ஆம் ஆண்டும் அதற்கு முதல் 58 ஆம் ஆண்டும் இதேபோல் ஒரு இனப்படுகொலை இடம் பெற்றிருந்தது.


அதேபோல் 77 ஆம் ஆண்டும் அந்தத் தொடர் இனப்படுகொலையானது இடம்பெற்றிருந்தது. அதன் உக்கிரமாக 83 ஆம் ஆண்டு இந்தக் கறுப்பு ஜூலையானது  நுவரெலியா அதாவது கண்டி மற்றும் கொழும்பிலே மிகவும் பார தூரமான நிலையிலேயே இடம்பெற்றிருந்தது. அன்றைய நாள் 83 ஆம் ஆண்டு ஜூலை 23ஆம் திகதியன்று சிங்களவர்களின் வெறியாட்டத்தின் மூலமாக பல தமிழ் அப்பாவி இளைஞர், யுவதிகள், ஏன் குழந்தைகள் கூட  எரியூட்டப்பட்ட தார் தடாகத்தினுள்ளே அல்லது தார் , பரலின்னுள்ளே போடப்பட்ட சம்பவமும் அன்று பதிவாயிருந்தது. அது ஒட்டுமொத்தமான  தமிழினத்தை சிங்கள நாட்டிலிருந்து அழிக்க வேண்டும் என்ற முனைப்புடன்  அன்று இடம்  பெற்றிருந்தது. அதற்கு  அன்றைய சிங்களதேச    ஆட்சியாளர்களும் உடந்தையாக இருந்தனர் என்பதுதான் எங்களுக்கு உண்மையிலேயே மறக்க முடியாத வேதனையான நிகழ்வாக இருக்கின்றது.


இந்த நாட்டை சிங்கள நாடாக அறிவிக்க வேண்டும். சிங்களவர் மட்டுமே வாழ வேண்டும் என்றிருந்த ஒரு காலகட்டத்திலே எங்களது உடமைகளும் உயிர்களும் சொத்துக்களும் பறிபோகப்பட்ட அந்த கறுப்பு ஜூலையை நாங்கள் இன்று நினைவு கூர்ந்து பார்க்க வேண்டியவர்களாக இருக்கின்றோம்.


அதேபோல் அந்த கறுப்பு ஜூலையை ஒத்ததாக தான் அண்மையில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நிகழ்வாக இருக்கட்டும் ஏன் தம்பி பாலகுமாரன் இசைப்பிரியா போன்றவர்களது சாவும் கூட மிகவும் கொடூரமாகவும் வருந்தத்தக்கதாகவும் இருக்கின்றது. அன்று தொடக்கம் இன்று வரைக்கும் மாறி மாறி வருகின்ற சிங்கள ஆட்சியாளர்கள் இதனை கண்டு கொள்வதில்லை. இதை நிறுத்த வேண்டும் இதற்கு உடனடியாக தடை ஒன்றை ஏற்படுத்த வேண்டும். எங்களது இனம் தமிழினம் இந்த திருநாட்டிலே தலை நிமிர்ந்து வாழ்வதற்கு ஒரு வழி சமைக்க வேண்டும். இதே போல் எங்களது நாட்டிலே எங்களுக்குரிய உரிமையும் இறைமையும் எங்களுக்கு வழங்கப்பட வேண்டும்.அதற்கு தற்போதைய  ஆட்சியாளர்கள் உறுதி தர வேண்டும் என்று கேட்டு இந்தக் கருப்பு ஜூலையிலே அன்று ஆகுளியாகிய அத்தனை உயிர்களுக்கும் இந்த இடத்திலே அஞ்சலி செலுத்தி நாங்கள் எங்களது வேண்டுதலை நிறைவேற்றி கொள்கின்றோம் என்றார்.

No comments:

Post a Comment

Post Top Ad