மட்டக்களப்பு மாவட்டம் திருப்பழுகாம கிராமத்தில் உள்ள சிறுவர்களைக் கொண்டு பழக்குவிக்கப்பட்ட "வள்ளி தினைப்புனம்" கரகம் சதங்கையணி விழா நேற்று முன்தினம் (20) திருப்பழுகாமம் விபுலானந்தபுரத்தில் இடம் பெற்றன.
இதன்போது சிறுவர்களைக் கொண்டு பயிற்றப்பட்ட கரகம் வடிவமைக்கப்பட்ட களரியில் வைத்து சிறுவர்களுக்கு காற்சதங்கை அணிவிக்கப்பட்டு, ஆற்றுகை செய்யப்படவுள்ளன.
இக்கரகத்தினை திருப்பழுகாமம் கரகாட்ட திலகம் வடிவேல் மகன் கலைஞர் புவிராஜ் அவர்களின் படைப்பில் உருவான "வள்ளி தினைப்புனம்"எனும் கரகாட்ட நிகழ்வின் கடந்த (18-07-2025)ஆம் திகதி கலைஞர்களுக்கு பாத்திரம் அதாவது சட்டம் கொடுக்கின்ற நிகழ்வானது இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
அதாவது திருப்பழுகாமம் மண்ணில் மருவிப்போன கரகாட்டம் புத்துயிர் கொடுக்கும் முகமாக நேற்று முன்தினம் (20-07-2025)ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை பிற்பகல் 3 மணிக்கு ஆரம்பிக்கும் முகாமாக இறைபதம் அடைந்த "கரகாட்ட திலகம் வடிவேல்" அவர்களின் உருவப்படத்திற்கு பூஜைகள் இடம் பெற்று காற்சதங்கை அணிவிக்கும் நிகழ்வு இடம்பெற்று கரகாட்டம் களரியில் ஆற்றுகை செய்யப்பட்டன.
இன்றைய நிகழ்வில் போரதீவுப்பற்று பிரதேசசபையின் பழுகாமம் வட்டார உறுப்பினர் சு.விக்கினேஸ்வரன்,மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
கரகாட்ட நிகழ்வினை பார்விட அதிகளவிலான பொதுமக்கள் பார்வையிட வந்தமையினை கானக்கூடியதாக இருந்தன.







No comments:
Post a Comment