அட்டாளைச்சேனை பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் புதிய நிர்வாக சபை தெரிவு (2025) நேற்று (25) மாலை இளைஞர் சேவைகள் அதிகாரி ஏ.ஆர்.றியாஸ்(yso) அவர்களின் தலைமையில் அட்டாளைச்சேனை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் இளைஞர் கழக அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஏ.சி.அகமட் அப்பர், உதவி பிரதேச செயலாளர் எப்.நஹிஜா முசாபிர், சம்மேளனத்தின் மாகாண உதவிப் பணிப்பாளர் சுசந்த, ஓய்வு பெற்ற மாவட்ட இளைஞர் சேவைகள் அதிகாரி மஜீத், பிரதேச இளைஞர் சேவை அதிகாரி மற்றும் இளைஞர் கழக உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
தெரிவு செய்யப்பட்ட புதிய நிர்வாக சபை விபரம்,,,,
- தலைவர் - ஏ.சி.எம்.றிப்கான்
- செயலாளர் - ஏ.ஆர்.றியாஸ் (yso)
- பொருளாளர் - என்.எம்.பாகிர்
- அமைப்பாளர் - எஸ்.எம்.றசாத்
- உப தலைவர் - எம்.ஆர்.அர்ஹம்
- உப செயலாளர் - ஏ.எல்.எம்.அர்தாத்
- உப அமைப்பாளர் - எஸ்.எல்.அஷ்மல்
செயற்பாட்டு குழு செயலாளர்கள்,
- விளையாட்டு - ஆர்.எம்.அஸாம்
- கலை, கலாச்சாரம் - என்.நிப்லான்
- முயற்சியான்மை - ஆர்.ஹனாஸ்
- ஊடகம் மற்றும் தகவல் - ஆர்.எம்.றிஸான்
- தேசிய சேவை - ஏ.எப்.ஸம்ஹா
- கல்வி, பயிற்சி, தொழில் ஆலோசனை மற்றும் வழிநடத்தல் பிரிவு - எம்.என்.றிப்கி
- நிதி - ஏ.பி.எம்.இல்ஹாம்
- சூழல் பாதுகாப்பு - எம்.ஆர்.சும்ரி அஹ்மத்
- கணக்காளர் - எம்.ஆர்.றிஸ்கி அஹ்மத்
ஒழுக்காற்று குழு
- எம்.எச்.அப்துல் பாரி
- ப.பாத்திமா பஸ்மிலா
- எம்.ஜே.எம். சக்கி
- ஐ.எம்.ஆதில்
- ஏ.எல்.எம். சீத்
தெரிவு செய்யப்பட்ட புதிய நிர்வாக சபைக்கு அதிதிகளினால் வாழ்த்து தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, சம்மேளனத்தின் தலைவர் தனது கண்ணி உரையினை நிகழ்த்தினார். அத்தோடு ஸலவாத்துடன் கூட்டம் நிறைவடைந்தது.
( றிஸான் றாசீக் )

No comments:
Post a Comment