அல்- ஹிலால் வித்தியாலய புலமையாளர்களை பாராட்டி கௌரவிக்கும் Sparkling Scholars - 2024 விழா ! - தமிழக குரல் - இலங்கை

Post Top Ad

Sunday, 25 May 2025

அல்- ஹிலால் வித்தியாலய புலமையாளர்களை பாராட்டி கௌரவிக்கும் Sparkling Scholars - 2024 விழா !

1000118589

கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது கல்விக் கோட்டத்தின் முன்னணி பாடசாலைகளில் ஒன்றான கமு/கமு/ அல்- ஹிலால் வித்தியாலய தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் வெற்றுப்புள்ளிக்கு மேல் பெற்று சித்தி பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் Sparkling Scholars - 2024 விழா அல் ஹிலால் வித்தியாலய கேட்போர் கூடத்தில் பாடசாலை அதிபர் யூ.எல்.நஸார் தலைமையில் இடம்பெற்றது.

1000118593

இந் நிகழ்வில் தேசிய மக்கள் சக்தி தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களையும் நினைவுச்சின்னங்களையும் வழங்கி கௌரவித்தார். 

1000118593

மேலும் இந்நிகழ்வில் கல்முனை கல்வி வலய பிரதிக்கல்வி பணிப்பாளர் எம்.எச்.எம். ஜாபீர் கௌரவ அதிதியாக கலந்து கொண்டதுடன் விசேட அதிதிகளாக கல்முனை கல்வி வலய பிரதிக்கல்வி பணிப்பாளர் எம்.எச். றியாசா, சாய்ந்தமருது கோட்டக்கல்வி பணிப்பாளர் அஸ்மா அப்துல் மலிக், ஓய்வு பெற்ற அதிபர் ஐ.எல்.ஏ. மஜீட், ஆசிரிய ஆலோசகர்கள், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக்குழு செயலாளர் பொறியியலாளர் ஏ.சி. கமால் நிஷாத், பழைய மாணவர் சங்க செயலாளர் எம்.ஐ.எம். சர்ஜுன், ஆசிரிய ஆலோசகர்கள், ஏனைய பாடசாலை அதிபர்கள், பாடசாலை பிரதி அதிபர்கள், உதவி அதிபர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

1000118591

1000118587

1000118585

 

                                     ( நூருல் ஹுதா உமர் )

No comments:

Post a Comment

Post Top Ad