இலங்கை ஆசிரியர் கல்வியலாளர் சேவைக்கு (SLTES) தெரிவான சம்சுதீன் ஹாஸீக் பாராட்டி கெளரவிப்பு ! - தமிழக குரல் - இலங்கை

Post Top Ad

Monday, 26 May 2025

இலங்கை ஆசிரியர் கல்வியலாளர் சேவைக்கு (SLTES) தெரிவான சம்சுதீன் ஹாஸீக் பாராட்டி கெளரவிப்பு !

1000118953

ஒலுவில், அல் - ஹம்றா மகா வித்தியாலயத்தில் கடமையாற்றும் ஆசிரியர் எஸ்.ஹாஸீக் இலங்கை ஆசிரியர் கல்வியலாளர் சேவைக்கு (SLTES) தெரிவு செய்யப்பட்டுள்ளார். 

1000118952

ஒலுவில் அல் - ஹம்றா மகா வித்தியாலயத்தின் பாடசாலை காலை ஆராதனை நிகழ்வில் அதிபர் அஷ்ஷெய்க் யூ.கே.அப்துர் ரஹீம் தலைமையில் இன்று (26) இடம்பெற்ற இப்பாராட்டு நிகழ்வில் சம்சுதீன் ஹாசீக் பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டார்.

1000118954

இந்நிகழ்வில்,  பிரதி அதிபர்களான ஏ.கமருன் நிஷா, ஜே.வஹாப்தீன்,
உதவி அதிபர் எம்.எச்.எம்.நசீம் உட்பட
ஆசிரியர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு  வாழ்த்துக்களையும் பாராட்டையும் தெரிவித்தனர்.

                                             (எஸ்.அஷ்ரப்கான்)

No comments:

Post a Comment

Post Top Ad