கசிப்பு உற்பத்திக்கு தயார் நிலையில் இருந்து பொருட்கள் சம்மாந்துறை பொலிஸ் ஊழல் ஒழிப்பு பிரிவினரினால் முற்றுகை; மல்வத்தை பகுதியில் சம்பவம் ! - தமிழக குரல் - இலங்கை

Post Top Ad

Monday, 19 May 2025

கசிப்பு உற்பத்திக்கு தயார் நிலையில் இருந்து பொருட்கள் சம்மாந்துறை பொலிஸ் ஊழல் ஒழிப்பு பிரிவினரினால் முற்றுகை; மல்வத்தை பகுதியில் சம்பவம் !

1000114861

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மல்வத்தை பகுதியில் உள்ள வயல் பிரதேசத்தில் பல காலமாக சூட்சுமமான முறையில் இயங்கி வந்த கசிப்பு உற்பத்தி நிலையம் இன்று  (19) காலையில் சம்மாந்துறை பொலிஸ் நிலைய ஊழல் ஒழிப்பு பிரிவினரினால் முற்றுகையிடப்பட்டது.


சம்மாந்துறை பொலிஸ் ஊழல் ஒழிப்பு பிரிவினர் மேற்கொண்ட சோதனை மற்றும் தேடுதல் நடவடிக்கையின் போது மல்வத்தை காத்தான்ட வட்டைப்பகுதியில் ஆற்றங்கரை அருகில் மண்ணில் புதைத்து வைக்கப்பட்டிருந்த கசிப்பு உற்பத்திக்கு தயார் இருந்த பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.

1000114864

இதேவேளை, கசிப்பு உற்பத்திக்காக தயார் நிலையில் இருந்த பொருட்கள் மீட்கப்பட்டதுடன் சந்தேக நபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


இதன் போது, 2 பரள் கோடா, பழ வகைகள், கொள்கலன்கள் ஆகியன மீட்கப்பட்டது சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

1000114863

மேலும், இந்த கைது நடவடிக்கையானது கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே. இப்னு அசாரின் ஆலோசனைக்கு அமைய சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ் ஜெயலதின் வழிகாட்டுதலில் சம்மாந்துறை பொலிஸ் நிலைய ஊழல் ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி என்.றிபாய்டீன் தலைமையிலான குழுவினரினால் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


                                            ( தில்சாத் பர்வீஸ் ) 

No comments:

Post a Comment

Post Top Ad