புலம்பெயர் தொழிலாளர் நலன்புரி சங்கத்தினால் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் கௌரவிப்பு ! - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

  

Post Top Ad

Monday, 19 May 2025

புலம்பெயர் தொழிலாளர் நலன்புரி சங்கத்தினால் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் கௌரவிப்பு !

1000114853

சம்மாந்துறை பிரதேசத்தில் மிகவும் நீண்ட காலமாக இயங்கிவரும் புலம்பெயர் தொழிலாளர் நலன்புரி சங்கத்தினால் கடந்த (15) திகதி புலம்பெயர் தொழிலாளர் நலன்புரி சங்கத்தின் தலைவர் ஏ.கே. றஸ்மியாவின் இல்லத்தில் கேக் வெட்டி வெற்றிக் கொண்டாட்டம் நடைபெற்றது.     

1000114855

நடைபெற்று முடிந்த சம்மாந்துறை பிரதேச சபை தேர்தலில் பலத்த போட்டிக்கு மத்தியில் வெற்றி பெற உறுப்பினர்களை கௌரவிக்கும் முகமாக கேக் வெட்டி வெற்றிக் கொண்டாட்டம் நடைபெற்றதுடன், எதிர் காலத்தில் சம்மாந்துறை பிரதேச சபையில் ஏற்பட இருக்கும் மாற்றங்கள் பற்றியும் கலந்துரையாடல் இடம்பெற்றது.

   
1000114854

இந்நிகழ்விற்கு, புலம்பெயர் தொழிலாளர் நலன்புரி சங்கத்தின் உறுப்பினர்கள், சம்மாந்துறை பிரதேச சபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முதன்மை வேட்பாளரும் தைக்காப்பள்ளி வட்டார வேட்பாளர், மட்டக்களப்பு தரவை வட்டார வேட்பாளர், மலையடி வட்டார வேட்பாளர், மத்தி வட்டார வேட்பாளர், கட்சி ஆதரவாளர்கள், வட்டார பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

 

                                            ( தில்சாத் பர்வீஸ் )



No comments:

Post a Comment

Post Top Ad