பொத்தானையில் முஸ்லிம் காங்கிரஸின் வெற்றிக்கொண்டாட்டம் ! - தமிழக குரல் - இலங்கை

Post Top Ad

Monday, 26 May 2025

பொத்தானையில் முஸ்லிம் காங்கிரஸின் வெற்றிக்கொண்டாட்டம் !

1000118989

மட்டக்களப்பு, கல்குடாத்தொகுதியில், செம்மண்ணோடை மாவடிச்சேனை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வட்டாரக்குழுவின் ஏற்பாட்டில் வெற்றிக்கொண்டாட்டமும் விருந்தோம்பல் நிகழ்வும் எழில்மிகு பொத்தானை அணைக்கட்டுப் பிரதேசத்தில் நேற்று (25)  இடம்பெற்றது.

1000118985

கோரளைப்பற்று, வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் ஏ.எல்.ஏ.கபூர் தலைமையில் இடம்பெற்ற நிலழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார்.

1000118983

அத்துடன், கட்சியின் பிரதித்தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எல்.ஏ .எம். ஹிஸ்புல்லாஹ், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.நளீம், கல்குடாத்தொகுதி அமைப்பாளர் சட்டத்தரணி ஹபீப் ரிபான் மற்றும் கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள், கோறளைப்பற்று, கோறளைப்பற்று மேற்கு, கோரளைப்பற்று வடக்கு பிரதேச சபைகள், ஏறாவூர் நகர சபை ஆகியவற்றின் உறுப்பினர்கள், வேட்பாளர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

1000118982

மழை காலங்களில் இந்த பொத்தானை அணைக்கட்டு உடைப்பெடுப்பதன் விளைவாக, 250 ஏக்கருக்கு மேற்பட்ட விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாக தலைவர் ஹக்கீமிடம் சுட்டிக்காட்டியதைத்தொடர்ந்து, அது சம்பந்தமான நடவடிக்கைகளை நீர்ப்பாசனத் திணைக்களத்துடன் துரிதமாக மேற்கொள்வதற்கு பாராளுமன்ற உறுப்பினர்  ஹிஸ்புல்லாஹ் முன்வந்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad