கலாபூஷணம் ஏ.பீர்முகம்மது எழுதிய தைலாப்பொட்டி நூல் வெளியீடு அறிமுகம் ! - தமிழக குரல் - இலங்கை

Post Top Ad

Wednesday, 12 February 2025

கலாபூஷணம் ஏ.பீர்முகம்மது எழுதிய தைலாப்பொட்டி நூல் வெளியீடு அறிமுகம் !

1000088510


கிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழா 2024 இல் சிறந்த சிறுகதை நூலாக தெரிவு செய்யப்பட்ட கலாபூஷணம் ஏ.பீர்முகம்மது எழுதிய தைலாப்பொட்டி நூல் வெளியீடு அறிமுகம் கடந்த  (08) சனிக்கிழமை சாய்ந்தமருது கலாசார மத்திய நிலைய ஏற்பாட்டில் சாய்ந்தமருது கலாசார மத்திய நிலைய மணிப்புலவர் மருதூர் ஏ மஜீது அரங்கில் சாய்ந்தமருது கலாசார மத்திய நிலைய பொறுப்பதிகாரி யூ.கே.எம். றிம்ஸான் தலைமையில் நடைபெற்றது. 

1000088514

இந்த நூல் வெளியீட்டு விழாவில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆஸிக் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். மேலும் கௌரவ அதிதிகளாக சபுத்தி (Sabuddhi) அமைப்பின் தவிசாளர் கலாநிதி. தமீர மஞ்சு, இலங்கை நீதிக்கான மய்யம் தலைவர் சட்டமுதுமாணி சௌபி எச் இஸ்மாயீல் ஆகியோருடன் ஓய்வு நிலை அதிபர் திருமதி அ.பேரின்பராஜா, சபத்தி (Sabuddhi) அமைப்பின் பொதுச் செயலாளர் திருமதி இரோசானி கல்ஹேன ஆகியோரும் விசேட அதிதிகளாக கலந்து கொண்டனர். 

1000088515

நூல் தொடர்பில் இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக மொழித்துறை தலைவர் கலாநிதி அபரசிரி விக்கிரமரத்ன, இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் எம். அப்துல் ரசாக், அக்கரைப்பற்று பேஜஸ் புத்தக இல்ல நிறைவேற்றுப் பணிப்பாளர் சிராஜ் மசூர், சிரேஷ்ட எழுத்தாளர் செங்கதிரோன் ஆகியோர் சிறப்புரைகள் நிகழ்த்தினர்.

1000088512

நூல் வெளியீடு, பிரமுகர்கள் உரை, திறன் நோக்கு, அபிநயப் பாடல், வாழ்த்துப் பா என சிறப்பாக நடைபெற்ற இந்த நூல் வெளியீட்டில் நிறைய கல்விமான்கள், உலமாக்கள், பாடசாலை அதிபர்கள், இலக்கியவாதிகள், எழுத்தாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

1000088511

                                            ( எஸ்.அஷ்ரப்கான் )

No comments:

Post a Comment

Post Top Ad