போரதீவுப்பற்றில் மோட்டார் சைக்கிளுடன் உழவு இயந்திரம் மோதி விபத்து - குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழப்பு ! - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 14 January 2025

போரதீவுப்பற்றில் மோட்டார் சைக்கிளுடன் உழவு இயந்திரம் மோதி விபத்து - குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழப்பு !



மட்டக்களப்புமாவட்டம் போரதீவுப்பற்று வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அம்பிளாந்துறை மண்டூர் பிரதான  வீதியில் பிலாலிவெம்பு சந்திக்கு அருகில், வெல்லாவெளியிலிருந்து காந்திபுரம் நோக்கிச் பயணித்த உழவு இயந்திரம் ஒன்று, எதிர் திசையில் இருந்து வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி நேற்று முன்தினம்  (12)  மாலை விபத்து ஏற்பட்டுள்ளது.


விபத்தில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிள் செலுத்துனர் களுவாஞ்சிகுடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்துள்ளார்.


விபத்தில் உயிரிழந்தவர் மண்டூர், சங்கர்புரத்தைச் சேர்ந்த 43 வயதுடைய 4 பிள்ளைகளின் தந்தையான  சாமித்தம்பி ஹரிகரன் என்பவராவர்.


சடலம் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.


விபத்தையடுத்து உழவு இயந்திரத்தின் சாரதி தப்பி ஓடிய நிலையில், வாகனத்தை வெல்லாவெளி பொலிஸார் கைப்பற்றியிருந்த நிலையில் பின்னர் தப்பிச் சென்றிருந்த சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளார்.


வெல்லாவெளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad