2009 ஆம் ஆண்டு கிழக்கு மாகாண நீர்ப்பாசன அமைச்சராக இருந்த போது பொத்துவில் விவசாயிகளின் நலன் கருதி பொத்துவில் பிரதேசத்தில் மாகாண நீர்ப்பாசன பொறியியலாளர் உப அலுவலகம் ஒன்றினை ஸ்தாபித்து ஜலால்தீன் சதுக்க கிராம அபிவிருத்தி சங்க கட்டிடத்திலும் பின்னர் குண்டுமடு கிராம அபிவிருத்தி சங்க கட்டிடத்திலும் தற்காலிகமாக இயங்கி வந்தது. 2017 ஆம் ஆண்டு உப அலுவலகம் அவரின் முயற்சியினால் பிரதான அலுவலகமாக தரமுயர்த்தப்பட்டு நிதி மற்றும் நிருவாக விடயங்கள் முழுமையாக வழங்கப்பட்டது.
பொத்துவிலுக்கு மாகாண நீர்ப்பாசன பொறியியலாளர் அலுவலகத்தினை கொண்டு வந்ததோடு நிற்காமல் பிரதேச செயலாளர் ஊடாக அரச காணி ஒன்றை பெற்றுக் கொடுத்து மூன்று மாடிக் கட்டிடம் அமைப்பதற்கான வேலைத்திட்டத்தில் அத்திவாரம் இடப்பட்டது. பின்னர் 2015 இல் நடந்த ஆட்சி மாற்றத்தின் பின்னர் எந்த விதமான அபிவிருத்தி சார் நடவடிக்கைகளும் இல்லாமல் இருந்தது.
அல்ஹம்துலில்லாஹ் மாகாண நீர்ப்பாசன பணிப்பாளர், அம்பாறை மாவட்ட பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர், பொத்துவில் நீர்ப்பாசன பொறியியலாளர் அவர்களின் அயராத முயற்சியினாலும் இன்று புதிய அலுவலகம் மக்கள் சேவைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment