கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகாவித்தியாலயத்தில் 77 வது சுதந்திர தின நிகழ்வு ! - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

  

Post Top Ad

Tuesday, 4 February 2025

கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகாவித்தியாலயத்தில் 77 வது சுதந்திர தின நிகழ்வு !

1000086608

இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் 77 வது சுதந்திர தினத்தை அனுஷ்டிக்கும் முகமாக, கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகாவித்தியாலயத்தில் இன்று 2025.02.04 ம் திகதி அதிபர் ஏ.ஜீ.எம்.றிசாத் தலைமையில் அதிகாரிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் இணைந்து மரியாதையுடன் தேசியக் கொடி ஏற்றிவைக்கப்பட்டது.

1000086606

இலங்கைத் திருநாட்டை கடந்த 77 வருடங்களுக்கு முன்னர் போத்துக்கீசர் , ஒல்லாந்தர் மற்றும் ஆங்கிலேயர்களின் ஆட்சிப் பிடியிலிருந்து மீட்டெடுக்கப்பட்டு இதுபோன்ற ஒரு தினத்திலேயே எமக்கு இந்த சுதந்திரம் பெற்றுத்தரப்பட்டது என்பது தொடர்பாகவும் அதற்காக பாடுபட்ட தலைவர்கள் பற்றிய வரலாறுகளும் அதிபரினால் நினைவுபடுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

1000086607

                                         ( எஸ்.அஷ்ரப்கான் )

No comments:

Post a Comment

Post Top Ad