17 வது மௌலவி பட்டமளிப்பு விழா, 05 ஹாபிழ் பட்டமளிப்பு விழா, 15 வது தலைப்பாகை சூட்டும் விழா கல்லூரியின் அதிபர் மௌலவி எம்.எச்.எம். சப்னிஸ் (மன்பயி இம்தாதி பாஸில் ஸகாபி) அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் சிறப்புரை ஆற்றியவர் மௌலானா மௌலவி அஸ்ஸெய்யிது வை.எம். புர்ஹானுத்தீன் தங்கள் வாப்பா (அஸ்ஸஃதி அல்அப்ழலி அல்ஹஸனிய்யி) தென்னிந்தியா ,கேரளா அவர்களினால் நிகழ்த்தப்பட்டது.
விசேட உரை நிகழ்த்தியவர் மௌலவி எம். முஸ்ஸம்மில் (மன்பயி) ஜாமியா மன்பயில் ஹிதாயா அரபுக் கலாபீடத்தின் பழைய மாணவர் அமைப்பின் தலைவர் அவர்களினால் நிகழ்த்தப்பட்டது. இந்நிகழ்வில் ஆலிம்கள், அரச உத்தியோகத்தர்கள், வர்த்தகர்கள், நலம் விரும்பிகள், மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர். இம்முறை 20 ஆலிம்களும் 04 ஹாபிழ்களும் பட்டம் பெற்ற அதே வேலை 06 மாணவர்கள் தலைப்பாகை சூட்டி கௌரவிக்கப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment