விவாதத்திற்கு வரும் ரவூப் ஹக்கீமின் ஜனாஸா எரிப்பு தனிநபர் பிரேரணை ! - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

  

Post Top Ad

Friday, 31 January 2025

விவாதத்திற்கு வரும் ரவூப் ஹக்கீமின் ஜனாஸா எரிப்பு தனிநபர் பிரேரணை !

c2965302-8dc3-4d2e-bf2f-87a10076fcfd


ஜனாஸா எரிப்பு விவகாரத்தில் அரசியல்வாதிகள் நடந்து கொண்ட முறை, அரச அதிகாரிகளின் போக்கு உட்பட கொரோனா தொற்றைக்காரணங்காட்டி முடக்கப்பட்டு அநீதி செய்யப்பட்ட  பிரதேச மக்களுக்காக எனப்பல தடவைகள் கடந்த அரசாங்கத்திடமும் தற்போதைய அரசாங்கத்திடமும் பாராளுமன்றத்தில் துறைக்குப் பொறுப்பான அமைச்சரிடம் பல கேள்விகளை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ ரவூப் ஹக்கீம் தொடுப்பதைக் காண முடிகிறது.


இவ்வாறானதொரு மோசமான சூழ்நிலை எதிர்காலத்திலும் முஸ்லிம் சமூகத்திற்கு ஏற்படாமல் இருக்கவும் தற்போது இவ்விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயத்தைப் பெற்றுக்கொடுக்கவும் தொடராக ரவூப் ஹக்கீம் போராடி வருகிறார்.


அந்த வகையில், பாராளுமன்றத்தில் இவ்விவகாரம் தொடர்பாக பாராளுமன்ற விசேட குழுவொன்றை நியமிக்க தனிநபர் பிரேரணையொன்றைக் கொண்டு வர முயற்சித்திருந்தார். குறித்த பிரேரணை விவாதத்திற்கு திகதி குறிப்பிடப்படாது (பா.28/2024) பாராளுமன்ற ஒழுங்குப்புத்தகத்தில் இடம்பெற்றிருந்தது.

வட்சப் ஊடாக இணைந்து கொள்ள இங்கே அழுத்தவும். 

கடந்த 23ஆம் திகதி கௌரவ சபாநாயகர் தலைமையில் நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்டதீர்மானத்திற்கமைய பெப்ரவரி 07ஆம் திகதி வெள்ளிக்கிழமை பாராளுமன்ற செயற்பாடுகளில் மு.ப. 11.30 முதல் பி.ப. 5.00 மணிவரை தனியார் உறுப்பினர் பிரேரணைகளுக்கான நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.


குறித்த நேரத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ரஊப் ஹக்கீம் அவர்களால் கொண்டு வரப்படும் கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்தவர்களின் சடலங்களை நல்லடக்கம் செய்வதைத் தவிர்த்து தகனஞ்செய்தமை தொடர்பில் விசாரணை செய்து பொருத்தமான விதப்புரைகளைச் சமர்ப்பிப்பதற்காக பாராளுமன்ற விசேட குழுவொன்றை நியமித்தல் குறித்த தனியார் உறுப்பினர் பிரேரணை மீது விவாதம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் பிராந்திய செய்திகளை எமக்கு அனுப்ப 076 24 899 54 எனும் வட்சப் இலக்கத்தினூடாக அனுப்பி வைக்க முடியும். 

                              ( எம்.என்.எம்.யஸீர் அறபாத் (BA,JP) )

No comments:

Post a Comment

Post Top Ad