சமுர்த்தி றன்விமன வீடு கையளிக்கும் நிகழ்வு ! - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

  

Post Top Ad

Thursday, 30 January 2025

சமுர்த்தி றன்விமன வீடு கையளிக்கும் நிகழ்வு !

d4a15980-4a0f-4575-996a-3f455bf2aec4

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலக பிரிவில் 2024ம் ஆண்டு சமுர்த்தி சௌபாக்கியா றன்விமன வீட்டிற்கு தெரிவு செய்யப்பட்ட பயனாளிக்கான வீடு இன்று (30) வியாழக்கிழமை கையளிக்கப்பட்டது.

ee5a408a-bf46-4205-9d62-d9d37e12bbc4

சமுர்த்தி தலைமையக முகாமையாளர்  எம்.ஐ.ஏ.அஸீஸ் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக ஓட்டமாவடி பிரதேச செயலாளர் ஏ.தாஹிர்  கலந்துகொண்டதுடன் ஏனைய அதிதிகளாக உதவிப் பிரதேச செயலாளர் எம்.ஆர். சியாஉல் ஹக், சமுர்த்தி முகாமையாளர்களான ஆர்.மதியழகன், என்.விஜிதன், கிராம சேவை உத்தியோகத்தர் ஏ. ஜி. பஸ்லி, அபிவிருத்தி உத்தியோகத்தர் எப்.சர்ஜூன் சமுர்த்தி அபிவிருத்தித் உத்தியோகத்தர்களான எம்.என்.எம்.சாஜஹான்,ஏ.எல்.எம்.நியாஸ், ஏ.கே.எம்.சர்ஜூன், எல்.கிசானந்த், சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பின் தலைவி ஏ.சி.சரீபா மற்றும் அமைப்பின் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

e3715092-1329-401a-a3b4-c52e2c532086

மாஞ்சோலை கிராம சேவகர் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிக்கு சமுர்த்தி  திணைக்களத்தின் ஏழு லட்சத்தி ஐம்பதாயிரம் ரூபா பங்களிப்புடன் உறவினர் நண்பர்கள் மற்றும் பயனாளியின் பங்களிப்புடன் இருபத்தி மூன்று லட்சத்தி அறுபதாயிரம் ரூபா பெறுமதியில் வீடு அமைக்கப்பட்டுள்ளது.

      

4ac84860-0258-43b2-a2c1-7ab70793b4ac

                                                     ( எஸ்.எம்.எம்.முர்ஷித் ) 

No comments:

Post a Comment

Post Top Ad