வெள்ளிமலை பிள்ளையார் அ. த. க. பாடசாலையின் முதலாம் தரத்துக்கு மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு! - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 31 January 2025

வெள்ளிமலை பிள்ளையார் அ. த. க. பாடசாலையின் முதலாம் தரத்துக்கு மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு!

கல்வி அமைச்சின் பணிப்புரைக்கு அமைவாக 2025ஆம் ஆண்டு முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நிகழ்வுகள் நேற்று (30) நாடளாவிய ரீதியில் பாடசாலைகளில் நடைபெற்றது.

இதற்கு அமைய மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு கல்வி வலயத்தின் மட்/பட்/வெள்ளிமலை பிள்ளையார் அ. த. க. பாடசாலையின் முதலாம் தரத்துக்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நிகழ்வுகள் இடம்பெற்றன. 

இதற்கமைவாக முதலாம் தரத்திற்கு மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு வித்தியாலய அதிபர் திரு.த.சேரலாதன் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வில் தரம் 02 மாணவர்கள் முதலாம் தரத்திற்கு வருகை தந்த புதிய மாணவர்களை இன் முகத்தோடு வரவேற்றதுடன் மாணவர்களின் வரவேற்பும் கலை நிகழ்வுகளும் பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது

இந்நிகழ்வில் பட்டிருப்பு கல்வி வலயத்தின் இப் பாடசாலையின் மேம்பாட்டு நிகழ்ச்சித் திட்ட இணைப்பாளர் திரு.எஸ்.சிறிதரன் பாடசாலை பழைய மாணவர்சங்கம்,பாடசாலையின் அபிவிருத்திச்சங்கத்தின் செயலாளர் , ஆசிரியர்கள்,மாணவர்கள், பெற்றோர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

                                                                           ( ரஞ்சன் ) 

No comments:

Post a Comment

Post Top Ad