மட் / பட் / ஸ்ரீ வெள்ளிமலைப் பிள்ளையார் அ.த.க.பாடசாலை பாடசாலையின் அதிபர் த.சேரலாதன் தலைமையில் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் நேற்று (24)ஆம் திகதி கருணை உள்ளம் அறக்கட்டளை அமைப்பினால் வழங்கிவைக்கப்பட்டது
மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று இளைஞர் விவசாயத்திட்ட கிராமத்தில் அமையப்பெற்ற பாடசாலையானது மிகவும் பின் தங்கிய பிரதேசத்தில் காணப்படும் அதிகஸ்ட பாடசாலையாகும் வறுமை கோட்டின் கீழ் வாழும் மாணவர்கள் கல்வி கற்கும் இப் பாடசாலையில் மாணவர்களின் குடும்பநிலை பொருளாதாரம் மிகவும் பின்தங்கியதாக காணப்படுவதோடு இப் பாடசாலையில் பல அடிப்படைத் தேவைகள் காணப்படுகின்றன.
எனவே இம் மாணவர்களின் இந் நிலையினை உணர்ந்து அவர்கள் கற்றல் செயற்பாடு மேலோங்குவதற்காக இக் கல்வி பணியினை ஆற்றியமை குறிப்பிடத்தக்கதாகும்.
No comments:
Post a Comment