இலங்கை ஜனாதிபதி அவர்களால் 2025 ஆம் ஆண்டிற்காக முன்வைக்கப்பட்ட "Clean SriLanka" திட்டத்தினை தெளிவூட்டும் விழிப்புணர்வு நிகழ்வானது நேற்று (24) ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேச சபையின் ஒன்றுகூடல் மண்டபத்தில் சபையின் செயலாளர் எஸ். பகீரதன் தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் கோ. இளங்கீரன் மற்றும் சபையின் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், முன்பள்ளி பாடசாலை ஆசிரியர்கள், நூலக உதவியார்கள் அனைவரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது பிரதேசசபையின் செயலாளரால் இத் திட்டம் பற்றியும், இத் திட்டத்தை வெற்றிகரமாக முன்கொண்டு சென்று அதன் இலக்கை எட்டுவதற்கான வழிமுறைகள் பற்றியும் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டதுடன், பங்குபற்றுனர்களின் கருத்துக்களும் கேட்கப்பட்டு அதற்கான விளக்கங்களும் வழங்கப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
No comments:
Post a Comment