வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் செம்மண்ணோடை கொண்டயன்கேணி பிரதேசத்தில் இன்று (30) அதிகாலை ஒரு மணியளவில் திடீரென ஏற்பட்ட தீ காரணமாக மர வேலைத்தளம் முற்றாக எரிந்து சேதமாகியுள்ளது.
முஹம்மது முஜீப் என்பவருக்கு சொந்தமான வேலைத்தளத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வட்சப் ஊடாக இணைந்து கொள்ள இங்கே அழுத்தவும்.
அதிகாலை வேளை ஏற்பட்ட தீயை அயலவர்களின் உதவியுடன் பரவாமல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடிந்தாலும் வேலைத்தளத்திலுள்ள பல இலட்சம் பெறுமதியான உபகரணங்கள், மரத்தளபாடங்கள், மர குற்றிகள் என்பன தீயில் கருகியுள்ளன.
இதனால் அறுபது இலட்சம் ரூபாய்க்கு மேல் நஷ்டம் ஏற்பட்டிருப்பதாகவும் அதன் மதிப்பீட்டு அறிக்கை உரிய அதிகாரிகள் ஊடாக பெறப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.
தீச்சம்பவத்திற்கான காரணம் இது வரை கண்டறியப்படவில்லை என்பதுடன் சம்பவம் தொடர்பில் வாழைச்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment