மட்டக்களப்பு மாவட்டம் புதுக்குடியிருப்பு சமூக நலன்புரி அமைப்பினால் இலவசமாக திருப்பழுகாமத்தில் நடாத்தப்பட்ட 6மாத தையல் பயிற்சி நெறியானது இன்றுடன் (22) நிறைவு பெற்றது.
தையல் பயிற்சியானது தொடர்ச்சியாக ஒவ்வொரு 6 மாதத்திற்கு ஒரு முறை தையல் மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு நிறைவு நாளில் தைக்கப்பட்ட ஆடைகள் காட்சிப்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இன்றைய தையல் பயிற்சி நிறைவு நாளில் திருப்பழுகாமம் தையல் பயிற்சி மாணவர்களினால் தைக்கப்பட்ட ஆடைகள் காட்சிப்படுத்தப்பட்டன.
இன்றைய நிகழ்வின் போது புதுக்குடியிருப்பு சமூகநலன்புரி அமைப்பின் உத்தியோகஸ்தர்கள் மற்றும் திருப்பழுகாமம் திலகவதியார் இல்ல முகாமையாளர் தையல், பயிற்சி ஆசிரியர்கள், தையல் மாணவர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
( ரஞ்சன் )
No comments:
Post a Comment