உள்ளூராட்சி உதவித்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேச சபையால் நிர்மாணிக்கப்பட்ட வெல்லாவெளி கலாச்சார மண்டபத்தை திறந்து வைக்கும் நிகழ்வு இன்று (22) பிரதேச சபையின் செயலாளர் எஸ்.பகீரதன் தலைமையில் இடம் பெற்றன.
இதில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் எஸ். பார்த்தீபன் அவர்கள் கலந்துகொண்டு கலாச்சார மண்டபத்தை திறந்துவைத்தார்.
இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலக சிரேஸ்ட சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.அன்பழகன் குரூஸ் அவர்கள் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டார்.
சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி கோ. இளங்கீரன் மற்றும் பிரதேச சபை அலுவலக உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் அனைவரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
( ரஞ்சன் )
No comments:
Post a Comment