மட்டக்களப்பு 35ஆம் கிராமத்தில் "இதயகரம் வழங்கும் இதயபூர்வமான உதவிகள்" ! - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 4 January 2025

மட்டக்களப்பு 35ஆம் கிராமத்தில் "இதயகரம் வழங்கும் இதயபூர்வமான உதவிகள்" !





“இதயத்தால் உணர்வோம் எம் உறவுகளை அணைப்போம்” எனும் தொனிப் பொருளுக்கு அமைவாக இயங்கூம் தொன்டு நிறுவனத்தினால் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது.


மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று 35ஆம் கிராமத்தில் உள்ள 25 குடும்பங்களுக்கு நேற்று   (03) நிவாரணம் வழங்கி வைக்கப்பட்டது.

அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தினால போரதீவுப்பற்று 35ஆம் கிராமம் முழுவதும் மிக மோசமான நிலையில் பாதிக்கக்கப்பட்டிருந்தது.  பாதிக்கப்பட்ட 35ஆம் கிராமத்தில் இருந்தும் தெரிவு செய்யப்பட்ட் 25 குடும்பங்களுக்கே இந்த உலர் உணவு நிவாரணப் பொதிகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



இன் நிவாரணமானது கிராம அபிவிருத்திச்சங்கம் மற்றும்  ஆலயநிருவாகத்தினரின் பங்குபற்றலுடன் வழங்கியமை குறிப்பிடத் தக்கதாகும்.


                                                                             (ரஞ்சன்)

No comments:

Post a Comment

Post Top Ad