மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேசசபை செயலாளர் எஸ்.பகீரதன் தலைமையில் அரச உத்தியோகத்தர்கள் சத்தியப்பிரமாணம் செய்து 2025ஆம் ஆண்டுக்கான தமது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டனர்.
அந்த வகையில் போரதீவுப்பற்று பிரதேசசபையில் நேற்று (01.01.2025 ) காலை 8.30 செயலாளர் எஸ்.பகீரதனினால் தேசியக் கொடி ஏற்றப்பட்டதுடன், புதுவருட சத்தியபிரமாணத்தை அரச உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் செய்து கொண்டனர்.
தமிழ், மொழிகளில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டதுடன், புதுவருட வாழ்த்துக்களை பரிமாறி தமது கடமைகளை பொறுப்பேற்றனர்.
அதனைத் தொடர்ந்து இவ் ஆண்டிற்கான தேசிய நிகழ்ச்சி த் திட்டமான "கிளீன் சிறி லங்கா (Clean Sri Lanka)" திட்டத்தை ஆரம்பிக்கும் முதற்கட்ட பணியாக எமது நாட்டை தூய்மைப்படுத்தும் நோக்கோடு போரதீவுப்பற்று பிரதேசசபையின் அலுவலகம் அதனைச்சுற்றியுள்ள பிரதான வீதிஓரங்கள் உத்தியோகஸ்தர் ஊழியர்களினால் துப்பரவு செய்யப்பட்டது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
நேற்று 2025 புதுவருட கேக் வெல்லாவெளி இலங்கை வங்கி கிளையினால் போரதீவுப்பற்று பிரதேசசபை அலுவலகத்தில் வங்கி முகாமையாளரினால் வழங்கப்பட்டு பிரதேசசபை செயலாளரினால் இன்று வெட்டப்பட்டது. இந்நிகழ்வில் அரச உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
(ரஞ்சன்)
No comments:
Post a Comment