சர்வதேச மனித உரிமைகள் பாதுகாப்பு மையம் (IHRM) அமைப்பின் அம்பாறை மாவட்ட குழு, சார்பாக "உதிரம் கொடுத்து உயிர் காப்போம்" எனும் தொனிப்பொருளில் வைத்தியசாலைக்கு குருதிக்கொடை ! - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 14 December 2024

சர்வதேச மனித உரிமைகள் பாதுகாப்பு மையம் (IHRM) அமைப்பின் அம்பாறை மாவட்ட குழு, சார்பாக "உதிரம் கொடுத்து உயிர் காப்போம்" எனும் தொனிப்பொருளில் வைத்தியசாலைக்கு குருதிக்கொடை !

1000068640


கல்முனை அஷ்ரஃப் ஞாபகர்த்த வைத்தியசாலையில் நிலவும் குருதிப் பற்றாக்குறை காரணமாக நேற்று  (13)  சர்வதேச மனித உரிமைகள் பாதுகாப்பு மையம் (IHRM) அமைப்பின் அம்பாறை மாவட்ட குழு, சார்பாக வைத்தியசாலைக்கு குருதி கொடையாளர்களால் குருதி நன்கொடை வழங்கப்பட்டது. 

வட்சப் சேனல் ஊடாக செய்திகளை பெற்றுக் கொள்ள இங்கே அழுத்தவும்.

1000068641


அமைப்பின் அம்பாறை மாவட்ட பணிப்பாளர் ஏ.ஜே.எப்.பைரோஸாவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு அமைப்பின் தேசிய தலைவர் கலாநிதி ரீ.றிஸ் வான் காஸீம், கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்திய கலாநிதி ஏ.எல்.எப்.றஹ்மான் மற்றும் தர முகாமைத்துவ வைத்திய அதிகாரி வைத்தியர் ஏ.ஆர்.எம்.ஹாரிஸ் ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டனர்.

1000068639


இங்கு அமைப்பின் உயர் பீட உறுப்பினர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டு குருதி வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad