அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக எலிக்காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல் போன்றவற்றில் இருந்து பாதுகாப்பு பெறுவதற்காக அட்டாளைச்சேனைபிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அவர்களின் ஆலோசனையின் கீழ் அட்டாளைச்சேனை பிரதேச சபையும் இணைந்து அட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரியில் இன்றைய தினம் (14) சிரமதான பணியில் ஈடுபட்டனர்.
வட்சப் சேனல் ஊடக செய்திகளை பெற்றுக்கொள்ள இங்கே அழுத்தவும்.
இந்நிகழ்வில் கல்வி கல்லூரியின் பீடாதிபதி சட்டத்தரணி கே. புண்ணியமூர்த்தி, அட்டாளைச்சேனை பிரதேச சுகாதார பரிசோதகர் எம்.சி.எம். ரவூப் அவர்களும் நிதி,நிருவாகத்திற்கு பொறுப்பான உப பீடாதிபதி எம்.சீ.ஜூனையிட் , விரிவுரை இணைப்பாளர்கள்,விடுதி அத்தியட்சகர்கள், ஆசிரிய பயிலுனர்களும் ,கல்விசாரா உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிரமதான பணியினை சிறப்பாக செய்து முடித்தனர்.
( எம்.ஜே.எம்.சஜீத் )
No comments:
Post a Comment