அல்-குர்ஆனை மனனம் செய்த அல் ஹாபிழ் அப்துல்லாஹ்வை கௌரவித்த மாவடிப்பள்ளி நம்பிக்கையாளர் சபையினர் ,மாவடிப்பள்ளி மக்கள் ! - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 14 December 2024

அல்-குர்ஆனை மனனம் செய்த அல் ஹாபிழ் அப்துல்லாஹ்வை கௌரவித்த மாவடிப்பள்ளி நம்பிக்கையாளர் சபையினர் ,மாவடிப்பள்ளி மக்கள் !

மாவடிப்பள்ளி நம்பிக்கையாளர் சபையின் ஏற்பாட்டில்‌ மாவடிப்பள்ளியைச் சேர்ந்த  பிறவியிலேயே தனது இரு கண் பார்வையை இழந்து "இந்த உலகத்தை நான் பார்க்கவில்லை என்றாலும் இந்த உலகம் என்னை பார்க்க வேண்டும்" என்ற ஒரு குறிக்கோளோடு  அல்-குர்ஆனை மனனம் இட்டு ஹாபிழாக பட்டம் பெற்றுள்ள அல்ஹாபிழ் அப்துல் அமீர் அப்துல்லாஹ் அவர்களை பாராட்டி , கௌரவிக்கும் நிகழ்வு நேற்று (13) மாவடிப்பள்ளி பெரிய பள்ளிவாசலில்  ஜும்ஆ தொழுகையை தொடர்ந்து நம்பிக்கையாளர் சபையின் தலைவர் மனாப் ஆசிரியர் தலைமையில்  இடம்பெற்றது. 


வட்சப் சேனல் ஊடக செய்திகளை பெற்றுக் கொள்ள இங்கே அழுத்தவும். 

இந்நிகழ்வில் நம்பிக்கையாளர் சபையின் உறுப்பினர்கள் , உலமாக்கள், புத்தி ஜீவிகள், மசூரா சபை உறுப்பினர்கள் , நலன்விரும்பிகள் மற்றும் ஊர்மக்கள் என அனைவரும் கலந்து சிறப்பித்தனர்.





                                                          ( முஹம்மத் மர்ஷாத் )

No comments:

Post a Comment

Post Top Ad