விவசாய அமைப்பினருடன் தாஹிர் எம்.பி கலந்துரையாடல் ! - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 11 December 2024

விவசாய அமைப்பினருடன் தாஹிர் எம்.பி கலந்துரையாடல் !

1000068055


காலநிலை சீற்றத்தினால் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தில் பாதிப்பிற்குள்ளான அம்பாறை மாவட்ட விவசாயிகளின் வேளாண்மை காணிகள், வாய்க்கால்கள் குறித்த பிரச்சினைக்கான தீர்வுகளை ஆராயும் நோக்கில் கடந்த திங்கட்கிழமை (09) நிந்தவூர் பிரதேச சபையில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றிருந்தது.

1000068057


இதில் திகாமடுல்ல நாடாளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர், நீர்ப்பாசன திணைக்கள பொறியியலாளர் முஹம்மட் அஸ்கி , விவசாயத் திணைக்களத்தின் நிந்தவூர் பெரும்போக உத்தியோகத்தர் ஹார்லிக் மற்றும் விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள், விவசாயிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

1000068056


இயற்கை சீற்றத்தினால் பதிப்புக்குள்ளான விவசாயிகளுக்கான இழப்பீடுகள் தொடர்பில் ஆராயப்பட்டிருந்ததுடன் சேதமடைந்துள்ள வயல் பிரதேச வீதிகள், வடிச்சல் வாய்க்கால் போன்றவற்றினை மீள் சீரமைப்பதற்கு தேவையான பொறிமுறைகளை துறைசார் நிபுணத்துவமுள்ளவர்களிடம் கேட்டறிந்து கொண்டதுடன் குறித்த விடயங்களுக்கான விரைவான தீர்வினை நோக்கி தான் பயணிப்பதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்திருந்தார்.

                                           ( எஸ்.அஷ்ரப்கான் )

No comments:

Post a Comment

Post Top Ad