மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேசசபையின் கடமையாற்றி ஓய்வு பெற்ற மற்றும் இடமாற்றம் பெற்றுச் சென்ற உத்தியோகத்தர்களை கௌரவிக்கும் நிகழ்வும், வருட இறுதி ஒன்று கூடல் நிகழ்வு நேற்று (08) நவகிரி குளத்தில் நடைபெற்றது.
போரதீவுப்பற்று பிரதேசசபையின் செயலாளர் மற்றும் நலன்புரிச்சங்கத்தின் தலைவருமாகிய எஸ்.பகீரதன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் ,ஓய்வு பெற்றுச் செல்லும் மற்றும் இடமாற்றம் பெற்றுச் சென்ற உத்தியோகத்தர்கள் நினைவுச் சின்னம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.
போரதீவுப்பற்று பிரதேசசபையின் நலன்புரிச் சங்கத்தின் தலைமையில் சிறுவர்கள் மற்றும் உத்தியோகஸ்தர்களுக்கான நிகழ்வும் இடம்பெற்றது. இந்நிகழ்வில் உத்தியோகஸ்தர்கள் ஊழியர்கள் மற்றும் சிறுவர்கள் கலந்துகொண்டனர்.
( ரஞ்சன் )
No comments:
Post a Comment