ஓட்டமாவடி அடம்படிவட்டுவான் விவசாய கண்டத்தில் 781 ஏக்கர் வேளாண்மை பாதிப்பு ! - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 11 December 2024

ஓட்டமாவடி அடம்படிவட்டுவான் விவசாய கண்டத்தில் 781 ஏக்கர் வேளாண்மை பாதிப்பு !





கடந்த வெள்ள அனர்த்தத்தினால் வாழைச்சேனை கமநல சேவைப்பிரிவில் அடம்பிடி வட்டுவான் விவசாயக் கண்டத்தில் 781 ஏக்கர் வேளாண்மை பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

வட்சப் சேனல் ஊடாக செய்திகளை பெற்றுக்கொள்ள உங்கள் கிளிக் செய்யவும்.

அடம்பிடி வட்டுவான் விவசாய கண்டத்தில் 916 ஏக்கர் வயல் நிலத்தில் 190 விவசாயிகள் விவசாயம் செய்து வருவதுடன், இதில் 781 ஏக்கர் விவசாய நிலம் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் 159 விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.


எங்களிடம் இருக்கும் மொத்த பொருளாதாரத்தோடு மேலதிகமாக கடன் பட்டு விவசாயத்தை மேற்கொண்டு 45 நாள் கடந்த நிலையில், திடீரென்று ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் எங்களது விவசாயம் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளது.



இதனைக்கருத்திற் கொண்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு எங்களுக்கான நஷ்டயீட்டைப் பெற்றுய்தருவதற்கு நடவடிக்கை எடுத்து நஷ்டயீட்டினை துரிதமாகப் பெற்றுய்தருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் என விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.     




                                                      ( எஸ்.எம்.எம்.முர்ஷித் )

No comments:

Post a Comment

Post Top Ad