தேசிய மக்கள் சக்தியின் புதிய அரசாங்கத்தின் கீழ் தேசத்திலிருக்கும் சகல தொழிற்சாலைகளையும் இலாபத்துடன் இயங்க வைக்கும் செயற்றிட்டத்தின் அடிப்படையில் கிழக்கு மாகாணத்தின் பெரும் சொத்தாகக் கருதப்படும் தேசிய கடதாசி ஆலையின் புதிய தவிசாளராக முன்னாள் நீர்ப்பாசனத் தினைக்களத்தின் தலைமை பொறியிலாளர் உப்பாலி ரத்ணாயக்க நியமிக்கப்பட்டுளார்.
வட்சப் ஊடாக செய்திகளை பெற்றுக் கொள்ள இங்கே அழுத்தவும்.
அந்த வகையில், புதிய தவிசாளருக்கும் தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட செயற்குழு உறுப்பினர் எ.ஏ.சி.நியாஸ்தீன் ஹாஜியாருக்குமிடையிலான சந்திப்பு இன்று (01-12-2024) ஓட்டமாவடியில் இடம்பெற்றது.
இதன் போது, கடந்த காலங்களில் குறித்த கடதாசி ஆலையின் செயற்பாடுகள் மற்றும் நிருவாகங்களின் நிலைமைகள் தொடர்பிலும் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய செயற்பாடுகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
No comments:
Post a Comment