நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் கீழ் இயங்கும் (ONUR) நிறுவனத்தின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி பங்களிப்பின் கீழ் நடத்தப்பட்ட அரச ஊழியர்களுக்கான 100 மணித்தியாலம் கொண்ட இரண்டாம் மொழி சிங்கள பயிற்சி நெறியின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று (05) சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.முஹம்மது ஹனீபா தலைமையில் செயலக கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ். ஜெகராஜன் கலந்து கொண்டு இரண்டாம் மொழி சித்தியடைந்தவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி வைத்தார்.
மேலும் இந் நிகழ்வில் கெளரவ அதிதிகளாக உதவிப் பிரதேச செயலாளர் யூ.எம் அஸ்லம் (LLB),பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் கலாநிதி ஏ.எல்.எம் அஸ்லம்,விசேட அதிதிகளாக சிங்கள பாடநெறி வளவாளர்களான மாவட்ட உளவள துனை உதவியாளர் ஏ.மனூஸ், ஏ.பி.ஆரிபின், கலாச்சார உத்தியோகத்தர் ரஸ்மி எம் மூஸா உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்வு தேசிய ஒருமைப்பாட்டு உத்தியோகத்தர் எம்.ஏ.எம்.வாஜீத் அலியின் ஒருங்கினைப்பின் கீழ் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
( எஸ்.அஷ்ரப்கான் )
No comments:
Post a Comment