மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம் பெற்ற வெள்ள அனர்த்தினால் பாதிக்கப்பட்ட போரதீவுப்பற்று பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட பெரியபோரதீவு, பட்டாபுரம், முனைத்தீவு ஆகிய கிராம மக்களுக்கு நேற்று (01) முதற் கட்டமாக ஆலயத்தில் வைத்து வெள்ள நிவாரணம் வழங்கப்பட்டது.
பெரியபோரதீவு பத்திரகாளியம்மன் ஆலயத்தின் நிதிப் பங்களிப்பின் மூலம் 20லட்சம் ரூபாய் பெறுமதியான நிவாரணம் வழங்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேசத்தில் உள்ள இந்து ஆலயங்களில் இருந்து நிதிவழங்கப்பட்டு வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படுகின்றமை முதற்தடவையாகும்
இது போன்று எமது நாட்டில் உள்ள இந்து ஆலயங்கள் நாட்டில் அனர்த்தங்கள் ஏற்படும் போது முன்மாதிரியாக செயப்படுமானால் மிகச்சிறந்ததோர் விடயமாகும்.
இன்றைய வெள்ள நிவாரண பணியில் போரதீவுப்பற்று பிரதேசசெயலாளரின் ஒத்துளைப்புடனும் இடம்பெறுகின்றது
கிராமஉத்தியோகஸ்தர்கள் மற்றும் கிராமத்து இளைஞர்களின் ஒத்துளைப்புடன் நிவாரணம் வழங்கப்படுகின்றது.
(ரஞ்சன்)
No comments:
Post a Comment