அம்பாறை நிந்தவூர் காஷிபுல் உலூம் அரபுக் கல்லூரி மாணவர்களின் அகால மரணம் ஏற்றுக்கொள்ள முடியா துயரை ஏற்படுத்துகிறது என்று நாபீர் பவுண்டேஷன் ஸ்தாபகர் பொறியியலாளர் உதுமாங்கண்டு நாபீர் தனது அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
அனுதாப செய்தியில் மேலும் அவர் குறிப்பிடும்போது,
நிந்தவூரிலிருந்து சம்மாந்துறைக்குச் சென்ற அரபுக் கல்லூரி மாணவர்கள் பயணித்த உழவு இயந்திரம், வௌ்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் உயிர்நீத்த 13 மாணவர்கள் மற்றும் சாரதி, மற்றுமொரு நபர் ஆகியோருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.
மரணம் என்பது எல்லோருக்கும் பொதுவானதே ஆனாலும் அகால மரணம் என்பது மனது ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு மீளாத்துயராகும்.
பிள்ளைகளை இழந்து துயருறும் பெற்றோர்களுக்கு, இறைவன் சாந்தியை, பொறுமையை வழங்க வேண்டும்.
எதிர்கால உலமாக்களாக சமூகத்தை நல்வழிப்படுத்தும் உலமாக்களாக மிளிர வேண்டியவர்கள் இன்று எம்மை விட்டு பிரிந்துள்ளார்கள்.
இவர்களை இறைவன் சுஹதாக்களாக ஷஹீதுகளாக ஏற்றுக் கொள்ள வேண்டும் அதற்காக எமது பிரார்த்தனைகள் என்றும் உண்டு.
இலங்கைத் திருநாட்டில் ஏற்பட்டுள்ள இந்த பேரனர்த்த பாதிப்பிலிருந்தும் இந்த அவலங்களிலிருந்து மீளுவதற்கு இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
மேலும் வெள்ள அனர்த்தத்தினால் உயிரிழந்துள்ள மத்ரஸா மாணவர்களின் குடும்பத்தினருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் எனது அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.
மேலும் மீட்புப்பணிகளில் ஈடுபட்ட ஜனாசா நலன்புரி அமைப்பினர்கள், காரைதீவு பொதுமக்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கின்றோம் என்றார்.
No comments:
Post a Comment