நத்தார் பண்டிகையை மட்டக்களப்பு சிறையிலிருந்து 12 கைதிகளுக்கு பொது மன்னிப்பு! - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

  

Post Top Ad

Wednesday, 25 December 2024

நத்தார் பண்டிகையை மட்டக்களப்பு சிறையிலிருந்து 12 கைதிகளுக்கு பொது மன்னிப்பு!

27ce606c-6912-4d70-b960-b221cbe8713f


நத்தார் பண்டிகையை முன்னிட்டு இன்று (25-12-2024) ஆம் திகதி மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து 12 சிறைக்கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.


சிறிய குற்றங்களுக்காகவும், வேறு காரணங்களுக்காகவும் தண்டனை பெற்றவர்களுக்கு நத்தார் பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதியினால் வழங்கப்படுகின்ற பொது மன்னிப்பின் அடிப்படையில் குறித்த பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

6a71ad39-62b3-472c-9eb0-e789ccbc9456


இதனை முன்னிட்டு மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து 12 ஆண் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.


இந்நிகழ்வு மட்டக்களப்பு சிறைச்சாலையின் அத்தியட்சகர் நல்லையா பிரபாகரன் தலைமையில் இடம்பெற்றுள்ளதுடன், இதன்போது சிறைச்சாலையின் பிரதம ஜெயிலர் உள்ளிட்ட சிறைச்சாலை அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

                                                                      ( ரஞ்சன் ) 

No comments:

Post a Comment

Post Top Ad