சாய்ந்தமருது வெள்ள அனர்த்தத்தினால் வீடுகள் பாதிக்கப்பட்டு பாடசாலையில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களை கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் திருமதி வைத்திய கலாநிதி சகீலா இஸ்ஸதீன் தலைமையில் கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.சீ.எம்.மாஹிர் உள்ளிட்ட குழுவினர் பார்வையிட்டனர்.
தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு சுகாதாரமான உணவு கிடைப்பதையும் அவர்களின் பொதுச்சுகாதாரத்தை உறுதிப்படுத்தி மருத்துவ வசதிகளை செய்து கொடுப்பதற்கும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.
இதன்போது பொது சுகாதார பரிசோதகர்களும், பொது சுகாதார மாதுக்களுக்கும் ஆலோசனைகள் வழங்கி வைக்கப்பட்டதுடன் போசாக்கு உணவுகளை வழங்கி வைப்பது தொடர்பிலும் அறிவுறுத்தல்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இதேவேளை, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸதீன் தலைமையில் கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.சீ.எம். மாஹிர் உள்ளிட்ட குழுவினரால் மருதமுனை வைத்தியசாலை பார்வையிடப்பட்டதுடன் நடமாடும் மருத்துவ முகாமை உடன் தொடங்குவதற்கும் பதில் பிரதேச வைத்திய அதிகாரிக்கு அறிவுறுத்தல் வழங்கி வைக்கப்பட்டது.
மருதமுனை வெள்ள அனர்த்தத்தினால் வைத்தியசாலை வளாகமும் கட்டிடங்களும் பாதிக்கப்பட்ட போதும் உத்தியோகத்தர்களும் உழியர்களும் மருத்துவ உபகரணங்களை பாதுகாப்பாக மீட்டெடுத்தனர் என்பது குறிப்பிட்டத்தக்கது.
(எஸ்.அஷ்ரப்கான்)
No comments:
Post a Comment