ப/அல் பத்ரியா முஸ்லிம் ம.வி. மாணவர் பாராளுமன்ற தேர்தல் - 2024/2025 ! - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 25 November 2024

ப/அல் பத்ரியா முஸ்லிம் ம.வி. மாணவர் பாராளுமன்ற தேர்தல் - 2024/2025 !



ல்வி அமைச்சின் சுற்று நிருபத்திற்கமைய ப/அல் பத்ரியா மு.ம.வி இன் அதிபர் அல் ஹாஜ்.M.A.M.ஸஹீர் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க ப/அல் பத்ரியா முஸ்லிம் மகா வித்தியாலய மாணவர் பாராளுமன்ற தேர்தல் ஆணைக்குழுவின் ஆணையாளர் தேசாபிமானி. விஷ்வகீர்த்தி. ஆசிரியர். சமாதான நீதிவான். M.நிப்fராஸ் தாஹிட் அவர்களின் ஆலோசனையின் கீழும், மாணவர் பாராளுமன்ற தேர்தல் ஆணைக்குழுவின் உதவி தேர்தல் ஆணையர்களான ஆசிரியர். ஜனாப்.S.M.M.பாஹிம் மற்றும் ஆசிரியை. ஜனாபா. A.S.S.ஹலீமா ஆகியோரின் ஒழுங்கமைப்பின் கீழும் கஹகொல்ல , தியதலாவ ப/அல் பத்ரியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் 2024/2025 மாணவர் பாராளுமன்ற தேர்தலானது 2024 டிசம்பர் மாதம் 4ம் திகதி பாடசாலையில் நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது.

வட்சப் ஊடாக செய்திகளை பெற்றுக் கொள்ள இங்கே அழுத்தவும் 

இப் மாணவர் பாராளுமன்ற தேர்தலில் தெரிவாட்சி அத்தியட்சகராக ப/அல் பத்ரியா மு.ம.வி யின் அதிபர் அல் ஹாஜ். M.A.M.ஸஹீர் அவர்கள் கடமையாற்றவுள்ளார்கள். இம் மாணவர் பாராளுமன்ற தேர்தலில் சுமார் 40 ஆசிரியர்கள் மற்றும் கல்வி சாரா ஊழியர்கள் கடமையில் ஈடுபடுத்த பாடசாலை மாணவர் பாராளுமன்ற தேர்தல் ஆணையகம் தீர்மானித்துள்ளதுடன் சுமார் 35 மாணவர்கள் தேர்தலில் வேட்பாளர்களாக போட்டியிட களமிறங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


இவ் வேட்பாளர்களிலிருந்து கூடிய வாக்குகளை பெறும் 25 வேட்பாளர்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்களில் 10 பேருக்கு அமைச்சுப் பதவிகளையும் வழங்க பத்ரியா மாணவர் பாராளுமன்ற தேர்தல் ஆணையகம் தீர்மானித்துள்ளது.

இப் மாணவர் பாராளுமன்ற தேர்தலின் ஊடாக மாணவர்களிடம் சமூக மனப்பாங்கு, தலைமைத்துவ பண்பு , ஆளுமை விருத்தி, சிறந்த தொடர்பாடல், பாடசாலை நேயம் போன்ற நோக்கங்களை அடையவும் மாணவர்களிடம் சிறந்த ஒழுக்கத் தன்மைகளை வளர்க்கவும் எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad