வெள்ள நீர் வடிந்தோடுவதற்கான தடைகளை நீக்கி சுத்தப்படுத்தும் வேலைத்திட்டம் ! - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 25 November 2024

வெள்ள நீர் வடிந்தோடுவதற்கான தடைகளை நீக்கி சுத்தப்படுத்தும் வேலைத்திட்டம் !



நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக வெள்ளம் ஏற்படுவதை தடுப்பதற்கான முன்ஆயத்தமாக பனங்காடு, சின்னமுகத்துவாரம்(அக்கறைப்பற்று), பட்டியடிப்பிட்டி (அக்கறைப்பற்று) மற்றும் முல்லைத்தீவு ஆகிய  பிரதேசங்களில் வெள்ள நீர் வடிந்தோடுவதற்கான தடைகளை நீக்கி சுத்தப்படுத்தும் வேலைத்திட்டத்தினை பார்வையிடுவதற்காக  அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை  நேற்று  (24) கள விஜயமொன்றை மேற்கொண்டார். 




இதன்போது அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தில் நடைபெற்ற வெள்ள அனர்த்த விடயங்கள் தொடர்பான கலந்துரையாடலில் அக்கறைபற்று பிரதேச செயலாளர் T.M. அன்சார், அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளர் M.A.C. ரியாஸ், உதவி திட்டமிடல் பணிப்பாளர் தமீம், அக்கறைப்பற்று மாநகர சபையின் பிரதம  முகாமைத்துவ உதவியாளர் சலீத், அக்கைப்பற்று நீர்ப்பாசன துறை தொழில்நுட்ப உதவியாளர் பரக்கத் ஆகியோர் கலந்துகொண்டனர்.

உங்கள் பிராந்திய செய்திகளை எமக்கு அனுப்ப 
0762489954 எனும் வட்சப் இலத்தினூடாக அல்லது srilankatamilagakural@gmail.com எனும் மின்னஞ்சல் ஊடாக அனுப்பிவைக்க முடியும்.




                                                              ( றிஸான் றாசீக் ) 


No comments:

Post a Comment

Post Top Ad