“2025 பெப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் வரவு செலவுத் திட்டம் முன்வைக்கப்படும் என்றும், அரச துறையினரின் சம்பளத்தை அதிகரிப்பது, பாடசாலை மாணவர்களுக்கு கொடுப்பனவு வழங்குவது, பின்தங்கிய மற்றும் சிறப்புத் தேவையுடைய சமூகங்களுக்கான கொடுப்பனவுகளை அதிகரிப்பது ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படும்” என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் பரப்புரைக் கூட்டம் இன்று தங்காலையில் இடம்பெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
16 சமையல்காரர்கள், 163 பாதுகாப்புப் பணியாளர்கள், 30 குடைகள், இருபதற்கும் மேற்பட்ட வாகனங்கள் உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விடுத்த கோரிக்கையை தாம் நிராகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தற்போதைய அரச விதிமுறைகளின்படி, முன்னாள் ஜனாதிபதிக்கு மூன்று வாகனங்கள் மட்டுமே வழங்கப்படும். முன்னாள் ஜனாதிபதிகள் பொது நிதி மூலம் பராமரிக்கப்படுவதை தடுக்க புதிய சட்டத்தை அறிமுகப்படுத்தப்படும் என்று ஜனாதிபதி குறிப்பிட்டார்.
#ADVERTISING
மேலும், முன்னாள் ஜனாதிபதிகளான ரணில் விக்ரமசிங்க மற்றும் மஹிந்த ராஜபக்ச ஆகியோரின் இல்லங்களில் முன்னர் வைக்கப்பட்டிருந்த இரண்டு அம்பியூலன்ஸ் வண்டிகளை தான் மீளப்பெற்றுக்கொண்டதாகவும் இந்த வசதிகளை தனிப்பட்ட சொத்தாகக் கருதக் கூடாது என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
“ஊழல் மற்றும் மோசடி தொடர்பான 400 கோப்புகள் சட்டமா அதிபரிடம் உள்ளன. அவை அனைத்தும் சட்ட நடவடிக்கைகளுக்காக திறக்கப்படும்.
சட்டரீதியாகவும், முறையாகவும் இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது அரசு சளைக்காது” என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
No comments:
Post a Comment