கிழக்கு மாகாணமட்ட கரம் சுற்றுப் போட்டியில் மட்/மம/ஏறாவூர் அறபா வித்தியாலயம் 17 வயதின் கீழ்ப் பிரிவில் போட்டியிட்ட பெண்கள் அணியினர் சம்பியனாகவும், 17 வயதின் கீழ் பிரிவில் போட்டியிட்ட ஆண்கள் அணியினர் இரண்டாம் இடத்தினையும் பெற்று தேசிய மட்டத்தில் நடைபெறவுள்ள போட்டிகளுக்கு தெரிவு செய்யப்பட்டு பாடசாலைக்கு பெயரையும் புகழையும் ஈட்டிக் கொடுத்துள்ளனர்.
கடந்த 27.07-2014 - 28.07.2024 ஆகிய இரு தினங்களாக திருகோணமலை விவேகானந்தா மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற கிழக்கு மாகாண மட்ட கரம் சுற்றுப் போட்டியில் மட்/மம/ஏறாவூர் அறபா வித்தியாலயத்தின் 17 வயது பிரிவின் கீழ் போட்டியிட்டு சாதனை நிலை நாட்டிய பெண்கள் அணியினருக்கும், ஆண்கள் அணியினருக்கும் வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு, இவர்களை பயிற்றுவித்த சாதனைக்கு சொந்தக்காரரான இப் பாடசாலையின் உடற்கல்விப்பாட ஆசிரியர் MYM. Ramees அவர்களுக்கும், இவருடன் கைகோர்த்து வெற்றிக்கான பல ஆலோசனைகளை வழங்கிய உடற்கல்விப்பாட ஆசிரியர் UL. Nafiudeen விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் Mr.AGM.Fazil அவர்களுக்கும், இப்போட்டி நிகழ்வுகள் அனைத்திற்கும் பூரண ஒத்துழைப்பை நல்கிய பாடசாலையின் முதல்வர் ML. Badiudeen அவர்களுக்கும், பாடசாலையின் பிரதி அதிபர், உப அதிபர்கள், மற்றும் ஆசிரியர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவிப்பதோடு தேசிய ரீதியாக நடைபெறும் போட்டியிலும் இவர்கள் வெற்றி வாகை சூடி பாடசாலையின் கீர்த்தியை ஒங்கவைக்க பிரார்த்திக்கின்றோம்.
( நிருபர் சாதிக் அகமட் )
No comments:
Post a Comment